Skip to main content

டோட்டோ-சான் ஜன்னலில் ஒரு சிறுமி

படித்த பள்ளிக்கூடங்களைப் பற்றி பேசுவதும் எழுதுவதும் உவகை தரும் செயல். நாம் படித்த பள்ளிகளின் மேல் எப்போதுமே நன்மதிப்பு (அல்லது இப்போது இருப்பது சரியில்லை என்பதால் ஏற்படும் ரொமாண்டிசிச எண்ணம்) இருக்கும். கடந்து வந்த பாதைகளுக்கு சரியான தொடக்கம் நம் பள்ளிகள்தான். ரயில் பெட்டிகளே வகுப்பறையாக இருந்த ஒரு பள்ளியைப் பற்றிய கதையே இந்த புத்தகம். சம்பிரதாயமான வார்த்தைகளால் இந்த புத்தகத்தைப் புகழாமல், புத்தகத்தைப் பற்றியும், எனக்கு புரிந்ததைப் பற்றியும் இங்கு எழுதி வைக்க தோன்றியது.

ஜப்பானின் டோக்கியோவுக்கு அருகில் இருந்த டோமோயி ஹாகுன் என்ற பள்ளியைப் பற்றிய கதைதான் இந்த புத்தகம். அந்த பள்ளியில் படித்த டெட்சுகோ குரோயாநாகி என்ற பெண் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். சோசாகு கோபயாஷி என்பவர் இந்த பள்ளியை 1937 இல் தொடங்கினார். 1945 இல் இரண்டாம் உலகப் போரின் போது குண்டு வீச்சுகளால் பள்ளி தீயில் எரிந்து அழிந்தது. வெறும் 8 ஆண்டுகளே இருந்த ஒரு பள்ளி இன்று ஜப்பானின் பாட புத்தங்களில் கூட இடம்பெற்றிருக்கிறது. புத்தகம் வெளியிடப்பட்ட முதல் ஆண்டே 45 இலட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது.

டோட்டோ-சான் என்ற சிறுமி ஒரு பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுகிறார். பாடம் நடத்தும் சமயங்களில் ஜன்னலின் வழியே வேடிக்கைப் பார்ப்பதும், அந்த பக்கம் வரும் இசைக் குழுவினரை அழைத்து அவர்களை இசைக்கச் சொல்வது போன்ற காரணங்களாலும். அவரின் தாயார் அவரை டோமாயின் பள்ளியில் சேர்க்கிறார். சேர்ந்த முதல் நாளிலிருந்தே அந்த பள்ளி டோட்டோ-சானுக்கு பிடித்து விடுகிறது. பழைய ரயில் பெட்டிகள் தான் பள்ளியின் வகுப்பறைகள். அன்பான தலைமையாசிரியர். தினமும் பள்ளியின் மதிய உணவுக்கு மலையிலிருந்து கொஞ்சம் கடலிலிருந்து கொஞ்சம் எடுத்து வரச் சொல்லும் தலைமையாசிரியர். எவருக்கேனும் அதில் குறைவிருந்தால் அதை பரிமாறும் தலைமையாசிரியரின் மனைவி. காலையிலேயே பாடம் அதிகமாக கற்று முடிந்து விட்டால், மதிய உணவிற்கு பிறகு குழந்தைகளை காலாற நடக்க சொல்லும் வகுப்பாசியர்கள் என குழந்தைகளை மகிழச் செய்யும் ஒரு பள்ளி இது.

ஒரு குழந்தையை பள்ளிக்கு அனுப்புவது அவர்களை உட்கார வைத்து வெறுமனே பாடங்களை கவனிப்பதற்காக மட்டுமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தும் அதை நாம் புறக்கணித்துக் கொண்டே வருகிறோம். பள்ளியின் தலைமையாசிரியர் சிறுவர்களை மதித்து அவர்களின் பேச்சுக்கும் செயலுக்கும் தடை போடாமல் இருக்க முடியுமா என்பது ஆச்சரியமே. சக மாணவர்கள் இந்த அளவுக்கு எந்த போட்டியும் இல்லாமல் நண்பர்களாக பழக முடியுமென்பதே ஆனந்தமான அனுபவம். இம்மாதிரியான பள்ளிகளில் படிக்கும் படித்த குழந்தைகள் கொடுத்து வைத்தவர்களே.

படித்து முடிக்கும் வரை மகிழ்ச்சியான மனநிலையுடனே இருந்தேன். ஆனால் இரண்டாம் உலகப் போரின்போது விமான குண்டு வீச்சால் பள்ளி முற்றிலுமாக சேதமடைந்து விட்டது. கோபயாஷி எவ்வளவோ முயன்றும் மறுபடி பள்ளியை தொடங்க முடியவில்லை. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம். நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்த நூலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த புத்தகத்தை ஆன்லைனில் படிக்க http://blog.balabharathi.net/wp-content/uploads/2012/10/totto-tamil.pdf

Comments

Popular posts from this blog

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...