Skip to main content

Posts

Showing posts from 2011

எங்கள் மகன் பிறந்த கதை!

என் மனைவியின் பிரசவக் கதையை எழுத ரொம்ப ஆசைப்பட்டேன். என் எழுத்து யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, சுகன்யாவுக்கு பிடித்திருப்பதால் கண்டிப்பாக எழுத ஆசை. 2011 ஏப்ரல் கடைசி வாரம் நிச்சயம் 2010 ஏப்ரல் போலவே நினைவில் என்றும் தங்கி இருக்கும். கடந்த ஏப்ரலில் திருமணம், திருமணத்திற்கு முந்தைய வாரம் லாஸ் வேகஸில் நடந்த OAUG Colloborate 10 இல் பங்கேற்கக் கிடைத்த வாய்ப்பென நிறைய மகிழ்ச்சியான தருணங்கள். இந்த வருடம் APICS CSCP தேர்வு முடிவு, முதல் திருமண நாள் மற்றும் குழந்தை :) சுகன்யாவிற்கு 8 ஆம் மாதம் ஆரம்பித்தவுடன் அத்தையும் மாமாவும் சிங்கப்பூர் வந்தனர். குழந்தைக்கு முதல் 6 மாதங்களுக்கு தேவையான அனைத்தையும் அண்ணா நகர் JUST BORN இல் பெட்டி நிறைய வாங்கி வந்திருந்தனர். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மார்ச் மாதத்தில் விசாவிற்கு விண்ணப்பித்திருந்தோம். ஏப்ரல் முதல் வாரத்தில் விசா கிடைத்து விட்டது. ஏப்ரல் 21 ஆம் தேதி வந்திறங்கினர். முதல் முறையாக வெளி நாட்டிற்கு வந்தாலும், சிங்கப்பூர் என்பதால் சுலபமாக வந்து சேர முடிந்திருந்தது. மறுபடியும் பெட்டி நிறைய பொருள்கள் :) திருமண நாளை ஒட்டியே பிரசவம் இருக்குமென எதி...

அஞ்சலி - எஸ்.வி.ராமகிருஷ்ணன்

ஹைதராபாத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு எஸ்.வி.ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்தேன். கவிஞர்.வா.மணிகண்டன் தான் என்னை எஸ்.வி.ஆருக்கு அறிமுகப்படுத்தினார். எனது அலுவலகம் எஸ்.வி.ஆரின் வீட்டுக்கு அருகில் இருந்ததால் மாலை நேரங்களில் அவரது வீட்டுக்கு செல்வது வழக்கம். ஹைதராபாத் திரைப்பட சங்கத்தின் திரைப்படங்களை அமீர்பேட் சாரதா ஸ்டுடியோஸிலும் சில சமயம் எல்.வி.பிரசாத் ப்ரிவ்யூ திரையரங்கிலும் காண முடியும். வார நாள்களில் திரைப்படம் என்றால் எஸ்.வி.ஆர் -உடன் செல்வது வழக்கம். மற்ற நாள்களின் மாலை நேரங்களில் பஞ்சாரா ஹில்ஸ் தாவரவியல் பூங்காவி்ல் ஒரு மணி நேரம் போல அவருடன் பேசிக்கொண்டே நடப்பது தான் வேலை. விடாமல் பேசிக் கொண்டே இருப்பார். சமகால வரலாறில் பெரிதும் ஈடுபாடு உடையவர். ரொம்ப சாதரணமாக பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியைப் பற்றிப் பேசுவார். எழுத்தாளர் அசோகமித்திரன், இ.பா, திலிப்குமார், க்ரியா ராமகிருஷ்ணன், திருப்பூர் கிருஷ்ணன், தி.க.சி போன்ற பலரைப் பற்றி அவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். 2008 புத்தகக் கண்காட்சியின் போது திலிப்குமாரையும், க்ரியா ராமகிருஷ்ணனையும் சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டேன். க்...