Skip to main content

Posts

Showing posts from May 11, 2008

ஹைத‌ராபாத்தில் ஓர் ஆண்டு

இன்று காலையில் அலுவலக நண்பர்களின் வாழ்த்து செய்திகள் கொஞ்சம் புத்துணர்ச்சியை அளித்தன. இந்நிறுவனத்தில் என்னுடைய இரண்டாம் ஆண்டு தொடக்க நாள். கடந்த ஆண்டு இதே மாதம் 14 ஆம் தேதி சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து சார்மினார் எக்ஸ்பிரஸில் கிளம்பும் போது, கூடிய சீக்கிரம் சென்னைக்கு வந்துவிட வேண்டுமென்ற எண்ணத்துடனே இருந்தேன்.மறுநாள் காலை 8 மணிக்கு செகந்திராபாத் நிலையத்தில் நான் இருந்த பெட்டியிலிருந்து அனைவரும் இறங்கி விட்டனர். நம்பள்ளி நிலையத்திற்கு வந்து சேரும்போது மணி 9 ஆகிவிட்டிருந்தது. அங்கே காத்திருந்த நண்பனுடன் கிளம்பி யூஸுப்குடா வில் இருக்கும் அவனது அறையில் அன்று முழுவதும் இருட்டறையில் தூங்கியவாறே கழித்தேன்.பெங்களூரை விட இங்கு சாப்பிட ஹோட்டல் கண்டுபிடிப்பது பெரிய வேலை என்று முதல் நாளே புரிந்தது.பெங்களூரில் தெருக்கு தெரு சாகர் களும் நந்தினி போன்ற ஆந்திர வகை உணவகங்களும் நிறைந்தே இருக்கும். இதில் சாகர்கள் காபியைத் தவிர வேறு எதற்கும் லாயக்கற்றவை. கோரமங்களா கிருஷ்ணா கேஃப் போன்ற தெய்வ மச்சான்களும் சில இடங்களில் இருப்பார்க‌ள்.ஹைத‌ராபாத்தில் நீக்கமற நிறைந்திருப்பது பிரியாணி தோட்ட‌ங்க‌ளே. 15 ஆம் ...