1920 களில் திருவல்லிக்கேணி மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் வழக்குரைஞராவது பெரிய குறிக்கோள். திருவல்லிக்கேணியின் ஆறுபேர்கள் என்ற குழு 1878இல் ஹிந்து ஆங்கில இதழைத் தொடங்கியது. அந்த ஆறு பேரில் ஒருத்தர் டிடி ரங்காச்சாரி எனும் வழக்குரைஞர். சென்னையின் புகழ்பெற்ற வழக்குரைஞர் மட்டுமில்லாமல் பின்னாளில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் ஆனார். அவரின் மகன் டிடி கிருஷ்ணமாச்சாரி 1928இல் டிடிகே குழுமத்தை நிறுவினார். சென்னையில் பெரும் ஆச்சரியத்தை அளித்த முடிவு அது. தந்தையைப் போல நீதித்துறையில் நுழைவார் என்ற எதிர்பார்ப்புகளை மீறி வணிகத்தில் இறங்கினார். இன்று Unilever என்றழைக்கப்படும் நிறுவனம் (இடையில் Hindustan Lever என்றும் அழைக்கப்பட்டது)அந்நாளில் Lever Brothers என்றழைக்கப்பட்டது. இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனத்தின் இந்திய விநியோகஸ்தராக இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. 1930 களில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ள வணிகத்தை தன் பதின்ம வயது மகனான டிடி நரசிம்மனிடம் ஒப்படைத்தார். பின்னாளில் சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சாராக பொறுப்பேற்று லைசன்ஸ் ராஜ் என்று கிண்டலிக்க...