வரலாற்றுப் புத்தகங்கள் தரும் வாசிப்பின்பம் அதிகம்தான். ஏறக்குறைய கால யந்திரத்தில் பயணிப்பதைப் போலத்தான். திருநெல்வேலியைப் பற்றி சங்க காலத்திலிருந்து 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால கட்டம் வரை ஏறக்குறையத் தொடர்ச்சியாக எழுதியுள்ளார். இந்த நூல் வெளியான காலகட்டத்தில் தமிழருக்கும் இந்தியருக்கும் இம்மாதிரியான வரலாற்று நூல் பெரும் ஆச்சரியத்தை அளித்திருக்கும். தமிழ்நாட்டைப் பற்றி மட்டுமல்லாமல் ஓரளவிற்கு தென்னிந்தியா பற்றியும் நிறைய தகவல்களை சேகரித்து எழுதியுள்ளார். அவருக்கு பிற நூல்களும் கடிதங்களும் தான் முக்கியமான ஆதாரமாக இருந்திருக்கிறது. 15ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய சில தகவல்கள் பிற்கால ஆய்வுகளால் மாறியிருக்கின்றன. ந.சஞ்சீவி படிக்க சுவாரசியமாகவே இதைத் தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். அநேக இடங்களில் அடைப்புக்குறிக்குள் அவரின் கருத்தை எழுதியிருப்பது சற்று ஆயாசமாக இருக்கிறது. பாளையக்காரர்களின் போர்களைப்பற்றிய இடங்களில் ஏறக்குறைய விளையாட்டு வர்ணனை அளவுக்கு இந்த அடைப்புக்குறி கருத்துகள் இருக்கின்றன. அதுவும் அவரின் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இந்த கருத்துகள் இருக்கின்றன. அவரின் மொழிபெய...