2014 ஆம் ஆண்டில் கனடா மற்றும் அமெரிக்க நிறுவனப் பணிகளின் போது சில (5) மாதங்கள் வீட்டிலிருந்தே பணிபுரிந்தேன். அதற்குப் பிறகு இப்போதுதான். தொடர்ச்சியாக 11 மாதங்கள் வீட்டிலிருந்தே வேலை. அனைவருக்கும் கொரானா. எனக்கிருந்தது வேறு. 2019 டிசம்பரில் தொடங்கி மூன்று முறை அறுவை சிகிச்சை அறைக்கு சென்று வந்தாகிவிட்டது. சிகிச்சைக்காக குழந்தைகளை சிங்கப்பூரில் விட்டுவிட்டு இந்தியா வந்து திரும்பினோம். திரும்பின இரண்டாம் நாளே அனைத்து விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன. Close Shave. இந்தியாவில் அறுவைசிகிச்சை முடிந்து ஒரு நாள் ஓய்வெடுத்துத் திரும்பும் வகையிலென்றால் சிங்கப்பூரில் அதே சிகிச்சை காலை 10 மணிக்கு சென்று பிற்பகல் 2 மணிக்கு திரும்பும் வேகத்தில் நடந்தது. அன்று மாலையே வேலையைத் தொடரவும் செய்தேன். கடுமையான வேலை இருக்கும் போதெல்லாம் எழுத்தாளர் பா.ராகவனின் “கடுமையான வேலையைப் போன்ற வேறு தியானம் இல்லை” (நினைவிலிருந்து) என்ற வரி ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது. ஞாபகம் வரமால் இருக்க ஒரு வழி செய்யணும். ஆண்டு இறுதியில் நாங்களும் இந்த ஆண்டின் உருவாக்கமான Staycation இல் இருந்து விட்டு வந்தோம். குழந்தைகளை ஏறக...