Skip to main content

Posts

Showing posts from June 29, 2008

சிங்கையில்

கடந்த ஜூன் மாதம் 7 ஆம் நாள் ஹைதராபாத்திலிருந்து சிங்கைக்கு கிளம்ப வேண்டியிருந்தது. முன் கூட்டியே முடிவு செய்யப்பட்டிருந்த பயணம் என்றாலும் ஊருக்கு போய் சில நாட்கள் தங்கியிருக்க முடியாமல் அவசர அவசரமாய் திரும்பி வந்ததாலோ என்னவோ கொஞ்சம் தடுமாற்றத்துடனே கிளம்பினேன். இரவு 11.50 மணி விமானத்திற்கு 7.30 மணிக்கே கிளம்பிவிட்டேன். 8.15 மணிக்கே RADIO CABS ன் ஓட்டுனர் 8.30 மணிக்கே என்னை ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் இறக்கி விட்டார். ஷம்ஷாபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் பெயருக்கு ஏற்றார் போல நன்றாகவே இருந்தது. ஆனால் மிக நீண்ட, சர்வதேச விமானங்கள் கிளம்பும் இடங்கள் எல்லாம் காலியாகவே இருந்தது. இதெல்லாம் பிரச்சனை இல்லை. மறுநாள் காலையில் என் பெரிய பொட்டியைத் தூக்கிக் தள்ளுவண்டியில் வைத்துவிட்டு தள்ளினேன்.தள்ளமுடியவில்லை. பக்கத்தில் இருந்த ஒரு வெள்ளையர் எப்படி தள்ள வேண்டுமென்று செய்தேக் காட்டினார்.அப்பாடா எங்க ஊர் மானத்தைக் காப்பாற்றி விட்டேன் என்று நினைத்துக்கொண்டேன்.பாங்காக் செல்லும்போது இதை எப்படி செய்யத் தவறினேன் என்று தெரியவில்லை.இங்கு சரியாக செய்துவிட்டேன். சிங்கைக்கு வந்து மூன்று வாரங்களுக்கு...