Skip to main content

Posts

Showing posts with the label சுஜாதா

கணேஷ் வசந்த் கதைகள் (தொடர்ச்சி)

விபரீதக் கோட்பாடு ஒரு சங்கம் செய்யும் ஒரு விபரீத செயலைக் கண்டுபிடிக்கும் கதை. தம்புசெட்டித் தெருவுக்கு ஒரு பெண்ணும் ஒரு இளைஞனும் கணேஷ் வசந்தின் அலுவலகத்திற்கு வருவார்கள். இருவரும் விரைவில் மணந்து கொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால் அந்த இளைஞனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி திடிரெனக் காணாமல் போய் விடுகிறார். எனவே மனைவியைக் கண்டுபிடித்து விவாகரத்துப் பெற வேண்டும். இது அந்த இரண்டாவதாக மணந்து கொள்ளப் போகும் பெண்ணின் பிடிவாதத்தால் தான். கணேஷ் வசந்த் சரி என்று ஒருமுறை அவர்கள் வீட்டிற்கு போவார்கள். அங்கு முதல் மனைவியின் அறையில் சில ஃப்லிம் சுருள்களை கணேஷ் எடுத்து வைத்துக் கொள்வார், கூடவே ஒரு நோட்டிலிருந்து மேல் காகிதத் துண்டையும். அங்கு அந்த இளைஞனின் சித்தப்பா ஒருவரையும் சந்திக்க நேரிடும். சித்தப்பாவின் உதவியாளராகத்தான் இரண்டாவது பெண் அங்கு சேர்ந்து அந்த இளைஞனைக் காதலித்து மணமுடிக்க இருப்பார். அந்த ஃப்லிம் சுருள்கள் அந்த வீட்டில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்த்தும். கணேஷ் முதல் மனைவி ஊட்டியில் இருப்பதைக் கண்டு பிடித்துவிடுவார். ஆனால் இவர்கள் அங்கு போய் சந்திக்கும் முன் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு இர...

கணேஷ் - வசந்த் கதைகள்

சில நாட்களுக்கு முன்பு சுஜாதாவின் கணேஷ் வசந்த் நாவல்களைப் பற்றிய வலைப்பக்கத்தை பார்க்க நேர்ந்தது. நானும் சில கணேஷ் வசந்த் நாவல்களை பற்றி சில வரிகள் எழுதலாமென தோன்றியது. நான் படித்த நாவல்கள் எழுத பட்டக் காலத்தைப் பற்றியும் அவற்றின் கால வரிசைகளைப் பற்றியும் ஒன்றும் தெரியாததனால் கதைக் குறிப்புகள் மட்டும் சில வரிகள்.சுஜாதாவின் கதைகள் சொல்லப் பட்ட விதத்தாலேயே வாசகர்களுக்கு ஒரு துள்ளலான மன நிலையை அளித்தன. வசந்தின் சொல்லி முடிக்கப்படா ஜோக்குகளும், கண் மறைவில் சொல்லப் பட்டு ,கேட்ட பெண்ணின் எதிர்வினைகள் மட்டுமென வாசகனுக்கு அறிமுகமான சில ஜோக்குகள் என பிரசித்தம். வசந்த் சில கதைகளில் பாரதி கவிதைகளையும் உபயோகத்திருப்பார். அப்துல் ரகுமான், மேத்தா போன்றொரின் கவிதைகளும் அடக்கம். கன்னம் வைப்பதைத் தவிர அனைத்து வேலைகளையும் வசந்த் செய்திருப்பார். ஒரு கதையில் அவரே இதைக் குறிப்பிட்டிருப்பார். சில முறை அந்த மாதிரி வேலைகளில் தாக்கப் பட்டிருப்பார். நைலான் கயிறில் கணேஷ் , வசந்தின் இம்மாதிரி வேலையைச் செய்து போலிஸிடம் அகப்பட்டு பின்பு சமாளித்து வெளிவருவார். ஏறக்குறைய எல்லாக் கதைகளின் துப்பறிதலிலும் Mistrust the O...

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...