இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை.
இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக எளிதாக இழந்துவிட்டேன்.
இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது.
அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திரத்தில் என்னைப் பல முறை கற்பனை செய்திருக்கிறேன்.என்னால் மறக்க முடியாத சிறுகதை அது.
ஒரு பொறியாளராக அவர் நிகழ்த்திய சாதனையை எவரும் கண்டுகொள்ளாதது போலவே இருக்கிறது.மின்னணு வாக்கு இயந்திரங்கள் இந்திய ஜனநாயகத்தின் மிகப் பெரிய சாதனை.
போய் வாருங்கள் சுஜாதா.. அனைத்திற்கும் நன்றி ..
Comments
நான் படித்த முதல் கதையை எழுதினவர் என்பதோடு...
எனக்குப் பிடித்த Quantom Physics பற்றி எளிமைத் தமிழில் விளக்கியவர் சுஜாதா.
மரணம் தவிர்க்க முடியாத்துதான்...
எனினும்...
மெல்லிய வலி இருக்கிறது.
இதை வைத்து சிலர்
அவரை இழிவுபடுத்தும் விதமாக பத்வெழுதுவது...
வருத்தத்தை அளிக்கிறது.
என் வருத்தம் என்னோடு.
என்ன செய்வேன்...?
எவரையும் குறை கூற எனக்கு என்ன உரிமை?
The true master of death, does not seek to run away from it.
He accepts that he must die...
and understands that there are far more worse things in the living world than dying.
-By J.K. Rowling in her book Harry potter and the Deathly Hollows.
என் மரணத்தை நான் எப்போதும் எதிர்கொள்ளச் சித்தமாயிருக்கிறேன்.
-அந்தோணி முத்து
எனக்கு ஒரு சுஜாதா இருந்தார்...இனி வரும் தலைமுறைகளுக்கு?????
தலைவணங்குகிறேன் என் தமிழனே...
எனக்கு ஒரு சுஜாதா இருந்தார்...இனி வரும் தலைமுறைகளுக்கு?????
தலைவணங்குகிறேன் என் தமிழனே...
vayathu ungalukku thaan thadai...
um ezhuthukalaukku illai.
varuthangaludan,
Princess
Natpirku iniyal.