Skip to main content

Posts

Showing posts with the label காப்பி

கா(ப்)பியும் காஞ்சிபுரமும்

எங்க‌ வீட்டில‌ எல்லாம் ஒரு நாளைக்கு சாதரணமா அஞ்சு த‌ட‌வ‌ எல்லாம் காப்பிக் குடிக்க‌லாம்.அதுவும் மாசி மக‌ம், ந‌ட‌வா திருவிழான்னா கேட்க‌வே வாணாம்.ஊர்ல‌ இருந்து சொந்த‌ கார‌ங்க‌ batch batch ஆ தான் வ‌ருவாங்க‌. எங்க‌ம்மா ஒவ்வொரு முறையும் அடுப்ப‌ங்க‌ரைக்கு போய் காப்பிய‌ப் போட‌ ஆர‌ம்புச்சுடுவாங்க‌.நாம‌ அப்ப‌டியே வ‌ந்துருக்கிற‌வ‌ங்களுக்கு கொடுக்கும் போது கூட‌ ஒன்னு வாங்கிக்கலாம். நாக்கு எந்நேரமும் தெகட்டிட்டே இருந்தாலும் அத பத்தியெல்லாம் நாங்க கவலைப்படறுதுல்ல.சில சமயம் ஏன் இந்த கச்சபேஸ்வரரும் கரி வரதரும் வருஷத்துக்கு ஒரு முறை மட்டும் வராங்கன்னு தோணும். இதுல‌ என்ன‌ பெரிய‌ விஷ‌ய‌ம்னா ஊர்ல‌ இருக்கிற‌ எல்லாருக்கும் ஒரு 90% சொந்தக்காரங்க காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், ஐயம்பேட்டை(காஞ்சிபுரம் பக்கத்திலயும் ஒன்னு இருக்குது) தான்.இப்ப தக்கோலம் (பொன்னியின் செல்வன்ல வர இராஜாதித்தர் போர் புரிந்த இடம் தாங்கோ) பக்கமும் பொன்னு கொடுத்து பொன்னு எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.மெட்ராஸ்ல எல்லாம் சொந்தகாரங்க தெருக்கு ஒன்னு கூட தேறாது. இவங்க எல்லார் வீட்லயும் காப்பி கதை இத விடப் பெரிய கதை. எங்க அண்ணன் எங்க அம்மாட்ட காப்பி ...