Skip to main content

Posts

Showing posts from January 13, 2019

பாயும் தமிழகம்

ஐயங்கார்குளத்தில் ஒரு காலத்தில் பச்சியப்பா என்ற பெயர் கொண்ட ஆழ்குழாய் கிணறு தோண்டும் லாரியை அடிக்கடி காண முடியும். பட்டுச்சேலை நெசவுத்தொழிலின் வளமான காலங்களில் ஒன்று. பாயும் தமிழகம் நூலைப் படித்தவுடன் நினைவில் வந்தது. 1960 களில் கடும் தண்ணீர் பஞ்சத்தால் தவித்த திருச்செங்கோடு விவசாயிகள் ஆழ்துளை கிணறுகளை நீருக்காக தோண்டினர். மெதுவாக விவசாயத்தோடும். அதை விட்டும், ஆழ்துளை கிணறு தோண்டும் தொழிலில் இறங்கி இன்று தென்னிந்தியா முழுக்க அந்தத் தொழிலில் கொடிகட்டி பறக்கின்றனர். அது மட்டுமில்லாமல் அருகிலுள்ள நாமக்கல் பகுதியினர் இந்தத் தொழிலுக்கான உபகரணங்கள் தயாரிப்பதில் முன்னணியிலுள்ளனர். இம்மாதிரி தங்கள் முயற்சியால். உழைப்பால். அர்ப்பணிப்பால் தோன்றி வளர்ந்து இன்றைய தமிழகத்தின் இரத்தினங்களாக பல நிறுவனங்கள் உள்ளன. அம்மாதிரியான ஒவ்வொரு நிறுவனங்களைப் பற்றியும் தனியே ஒரு புத்தகமே எழுதலாம். சுசீலா ரவீந்திரநாத் ஒவ்வொரு நிறுவனத்தின் வரலாற்றைச் சுருக்கமாக எழுதியுள்ளார். முருகப்பா, டிவிஎஸ், அமல்கமேஷன் போன்ற குடும்ப நிறுவனங்கள், நாட்டின் சுதந்தரத்துக்கு முன் தொடங்கப்பட்ட நிறுவனங்கள், வாகன உற்பத்தி, விநியோக...

மெய்வருத்தம் பாரார்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. இந்த குறளுக்கு நமக்கு பொருள் தெரியும். துணிந்தபின் எண்ணுவேன் என்பது இழுக்கு, பின் வேறென்ன செய்ய வேண்டும்? திருக்குறள் மனிதன் அறத்தோடு வாழ வழி சொன்ன தொன்மையான நூல். தமிழில் திருக்குறளின் தொடர்ச்சியான நூலாக 17 ஆம் நூற்றாண்டில் குமரகுருபரரால் எழுதப்பட்ட நீதிநெறிவிளக்கம் கருதப்படுகிறது. அறத்தின் பாற்பட்ட வாழ்வின் அடிப்படைகளை விளக்குகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் எழுத வரும் ஒவ்வொருவரும் தன் முன்னோடிகளின் நூல்களை ஐயந்திரிபுற கற்றிருக்க வேண்டும். குமரகுருபரர் தன்னை தமிழின் நீண்ட இலக்கிய மரபின் தொடர்ச்சியாகவே நிலைநிறுத்துகிறார். கல்வியின் பயனும் சிறப்பும், கல்வியின்பம், கல்விச்செல்வம், புலவர் பெருமை, கற்றன மறவாமை, கல்வியழகே அழகு, பெரியோர் பணிவு, கற்றபடி நிற்றல், மேன்மக்கள் பெருமை, இறைமாட்சி, ஈகை, கருமமே கண்ணாயினார் போன்ற தலைப்புகளில் இன்னிசை வெண்பாக்களாக இயற்றியுள்ளார். ஏறக்குறைய திருக்குறளின் அதிகாரங்களையே நினைவுபடுத்தும். அதில் ஒரு வெண்பா மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார் எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி அ...

2018 இல் படித்த புத்தகங்கள்

2018 இல் படித்த புத்தகங்கள் 1. Better - Atul Gawande 2. என் பயணம் - அசோகமித்திரன் 3. Swami and Friends - RK Narayan 4. The Bachelor of Arts - RK Narayan 5. Waiting for the Mahatma - RK Narayan 6. The Man Eater of Malgudi - RK Narayan 7. The Dark Room - RK Narayan 8. A Tger for Malgudi - RK Narayan 9. The Guide - RK Narayan 10. பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் (5 தொகுதிகள்) - கங்கை அமரன் 11. மணிமேகலை (உரை வடிவில்) - என்.சொக்கன் 12. குற்றப் பரம்பரை - வேல.ராமமூர்த்தி 13. Ways of Seeing - John Berger 14. Steal Like An Artist - Austin Kleon 15. தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் - ஜெயமோகன் 16. வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம் - பாக்யராஜ் 17. Complications - Atul Gawande 18. வெஜ் பேலியோ - பா.ராகவன் 19. Being Mortal - Atul Gawande 20. கம்பாநதி - வண்ணநிலவன் 21. கிருஷ்ணப் பருந்து - ஆ.மாதவன் 22. புலி - என்.சொக்கன் 23. மெர்க்குரி பூக்கள் - பாலகுமாரன் 24. இரும்பு குதிரைகள் - பாலகுமாரன் 25. பந்தயப் புறா - பாலகுமாரன் 26. தாயுமானவன் - பாலகுமாரன் 27. அகல்யா - பாலகுமாரன் 28. கிருஷ்ணனின் ஆய...