Skip to main content

Posts

Showing posts from December 1, 2013

காலாற ஒரு நடை அல்லது வாஷிங்டனில் வெங்கடாசலம் (1)

சில சமயம் தற்செயலாக நமக்கு பிடித்த இடத்திற்கு போகும் வாய்ப்பு கிடைப்பது ஆச்சர்யம் தான். கடந்த ஜூலை மாதம் லாஸ் ஏஞ்சலஸ் அருகில் உள்ள ஆண்டாரியோ எனும் ஊருக்கு செல்ல நேர்ந்தது. ஏறக்குறைய இரண்டு மாதங்கள் பணி நிமித்தமாக அங்கு தங்கியிருந்தேன். அவ்வளவு நாள் இருந்ததால், சான் டியாகோ நகருக்கு சென்றிருந்தேன். நண்பன் ராஜாகுமார் சான் டியாகோவிலிருந்து ஆண்டாரியோ வந்து அழைத்துச் சென்றான். வேறு சில வாரயிறுதி நாட்களில் வெனீஸ் மற்றும் சாண்டா மோனிகா கடற்கரைக்கும் சென்றிருந்தேன். அதெல்லாம் பெரிய விஷயமாகவே இப்போது தெரியவில்லை. அக்டோபர் மாதம் அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் உள்ள கொலம்பியா எனும் நகரத்துக்கு சென்றிருந்தேன். நண்பர் ஒருவர் கொலம்பியா என்றவுடன், நீ எப்படி தென்னமெரிக்கா சென்றாய் என்று கேட்டுவிட்டார். எனக்கு தேவையில்லாமல் பாப்லோ எஸ்கோபர் பெயரெல்லம் ஞாபகத்துக்கு வர ஆரம்பித்து விட்டது. அதனால் தான் இங்கு மாநிலத்தின் பெயரையும் குறிப்பிட்டேன். வாஷிங்டன் அருகில் இருப்பதால், ஒரு சனிக்கிழமை காலையில் பையைத் தூக்கிக்கொண்டு கிளம்பி விட்டேன். Greenbelt Metro ரயில் நிலையம் வரை காரில் சென்று அங்கிருந்து ரயில...