Skip to main content

Posts

Showing posts from December 22, 2013

காலாற ஒரு நடை அல்லது வாஷிங்டனில் வெங்கடாசலம் (2)

மீண்டும் வாஷிங்டன் போகும் திட்டமிருக்கிறதா, உடன் வர முடியுமா என அலுவலக நண்பர் கேட்டவுடன் சரியென்று சொல்லி விட்டேன். சென்ற முறை நேரம் ஆகிவிடும் என்ற காரணத்தால் ஃபோர்ட் அரங்கத்திற்கும் ஜார்ஜ் டவுனுக்கும் செல்லவில்லை. ஃபோர்ட் நாடக அரங்கம் எங்கிருக்கிறது என சரியாக பார்க்காமல் விட்டிருந்தேன். மால் பகுதியில் தான் இருக்கிறது என பின்னர்தான் தெரிந்துகொண்டேன். ஜார்ஜ் டவுனுக்கு மட்டும் தனியே பேருந்தில் செல்ல வேண்டும். ஃபோர்ட் தியேட்டரில் என்ன? இன்றும் அது நாடக அரங்காக இயங்கிக் கொண்டிருக்கிறது. 1865, ஏப்ரல் 14 ஆம் நாள் இரவு வெறும் நாடகம் மட்டும் நிகழவில்லை. அமெரிக்காவின் அடிமையொழிப்பை எதிர்த்து அணிதிரண்ட கான்ஃபெடரேட்ஸ் என்று அறியப்படும் தெற்கு மாநிலங்களின் ராணுவத்துடன் 5 ஆண்டுகளுக்கும் மேல் நடந்த உள்நாட்டு யுத்தம் 1865, ஏப்ரல் 9 ஆம் தேதி முடிவடைந்தது. அமெரிக்க அரசின் படையினரிடம் தெற்கு படையினர் சரணடைந்தனர். மனைவியின் வற்புறுத்தலின் பேரில் ஃபோர்ட் அரங்கிற்கு அன்று நாடகம் பார்க்க வந்தார் அமெரிக்கவின் 16 வது அதிபர் ஆபிரஹாம் லிங்கன். போர் முடிந்து 5 நாட்களே ஆகியிருந்தன. அதிபருக்கென்று இருந்த ஒரு தனி...