Skip to main content

Posts

Showing posts from October 5, 2008

கணேஷ் - வசந்த் கதைகள்

சில நாட்களுக்கு முன்பு சுஜாதாவின் கணேஷ் வசந்த் நாவல்களைப் பற்றிய வலைப்பக்கத்தை பார்க்க நேர்ந்தது. நானும் சில கணேஷ் வசந்த் நாவல்களை பற்றி சில வரிகள் எழுதலாமென தோன்றியது. நான் படித்த நாவல்கள் எழுத பட்டக் காலத்தைப் பற்றியும் அவற்றின் கால வரிசைகளைப் பற்றியும் ஒன்றும் தெரியாததனால் கதைக் குறிப்புகள் மட்டும் சில வரிகள்.சுஜாதாவின் கதைகள் சொல்லப் பட்ட விதத்தாலேயே வாசகர்களுக்கு ஒரு துள்ளலான மன நிலையை அளித்தன. வசந்தின் சொல்லி முடிக்கப்படா ஜோக்குகளும், கண் மறைவில் சொல்லப் பட்டு ,கேட்ட பெண்ணின் எதிர்வினைகள் மட்டுமென வாசகனுக்கு அறிமுகமான சில ஜோக்குகள் என பிரசித்தம். வசந்த் சில கதைகளில் பாரதி கவிதைகளையும் உபயோகத்திருப்பார். அப்துல் ரகுமான், மேத்தா போன்றொரின் கவிதைகளும் அடக்கம். கன்னம் வைப்பதைத் தவிர அனைத்து வேலைகளையும் வசந்த் செய்திருப்பார். ஒரு கதையில் அவரே இதைக் குறிப்பிட்டிருப்பார். சில முறை அந்த மாதிரி வேலைகளில் தாக்கப் பட்டிருப்பார். நைலான் கயிறில் கணேஷ் , வசந்தின் இம்மாதிரி வேலையைச் செய்து போலிஸிடம் அகப்பட்டு பின்பு சமாளித்து வெளிவருவார். ஏறக்குறைய எல்லாக் கதைகளின் துப்பறிதலிலும் Mistrust the O...