Skip to main content

கண்ணீரில்லாமல்..


இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை.

இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன்.

இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது.

அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை கற்பனை செய்திருக்கிறேன்.என்னால் மறக்க முடியாத சிறுகதை அது.

ஒரு பொறியாளராக அவர் நிகழ்த்திய சாதனையை எவரும் கண்டுகொள்ளாதது போலவே இருக்கிறது.மின்னணு வாக்கு இயந்திரங்கள் இந்திய ஜனநாயகத்தின் மிகப் பெரிய சாதனை.

போய் வாருங்கள் சுஜாதா.. அனைத்திற்கும் நன்றி ..

Comments

ஆமாம் அவர் இனி உடல் வலியில்லாமல் உறங்கட்டும். போய் வாருங்கள் சுஜாதா.
8 வயதில் அர்த்தம் புரியாமல் படித்த முதல் நாவல் "மேகத்தைத் துரத்தினவன்."

நான் படித்த முதல் கதையை எழுதினவர் என்பதோடு...
எனக்குப் பிடித்த Quantom Physics பற்றி எளிமைத் தமிழில் விளக்கியவர் சுஜாதா.

மரணம் தவிர்க்க முடியாத்துதான்...
எனினும்...

மெல்லிய வலி இருக்கிறது.

இதை வைத்து சிலர்
அவரை இழிவுபடுத்தும் விதமாக பத்வெழுதுவது...
வருத்தத்தை அளிக்கிறது.

என் வருத்தம் என்னோடு.

என்ன செய்வேன்...?

எவரையும் குறை கூற எனக்கு என்ன உரிமை?

The true master of death, does not seek to run away from it.
He accepts that he must die...
and understands that there are far more worse things in the living world than dying.
-By J.K. Rowling in her book Harry potter and the Deathly Hollows.

என் மரணத்தை நான் எப்போதும் எதிர்கொள்ளச் சித்தமாயிருக்கிறேன்.

-அந்தோணி முத்து
சுஜாதா மறைந்தாலும் அவரது எழுத்துக்கள் என்றும் மறையாது...
எனக்கு ஒரு சுஜாதா இருந்தார்...இனி வரும் தலைமுறைகளுக்கு?????
தலைவணங்குகிறேன் என் தமிழனே...
சுஜாதா மறைந்தாலும் அவரது எழுத்துக்கள் என்றும் மறையாது...
எனக்கு ஒரு சுஜாதா இருந்தார்...இனி வரும் தலைமுறைகளுக்கு?????
தலைவணங்குகிறேன் என் தமிழனே...
vellai thaalil padum siru karumpulli kooda appatamaaha theriyum.adhaey pol dhaan, sirandha ezhuthaalar enbadhaal avar ezhuthiya irattai artha vasanangal (boys,sivaji.,) ulloora sila pala nerudalhalai ennul yaerpaduthi irundhaalum thalaimurai kadandha thanniharatra ezhuthaalar sujaatha enbadhil ellalavum iyam illai.

vayathu ungalukku thaan thadai...
um ezhuthukalaukku illai.

varuthangaludan,
Princess
Avar oru kazhanjiyam thaan, avarin katrathum petrathum padiththal, niraiya thagavalgal kidaiththu vidum, ivarukku mattum eppadi ivlavu therinthu vidukirathu endru thondrum. Srirangaththu devathaigal, kanaiyazhiyin kadaisi pakkangal irandum enakku migavum pidiththa thoguppugal.

Natpirku iniyal.

Popular posts from this blog

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

காரைக்குடியிலிருந்து காஞ்சிபுரம் வரை...

பயணங்களின் அழகியலை நல்ல அனுபவமாகவும் ரசிக்கக் கற்றுக் கொண்டது இந்த காரைக்குடியிலிருந்து மாலை நேரத்தில் தொடங்கி மறுநாள்‍ காலையில் காஞ்சிபுரம் ஐயங்கார்குளத்தில் (பூர்வீகம்) முடிவடையும் ஓர் அற்புதமான பயணத்தில் தான். 2001 இல் கருணாநிதியைக் கைது செய்த அதே தினம் பேருந்துகள் கிடைக்காததால் செங்கல்பட்டில் இருந்து காரைக்குடியை நோக்கிய எனது பயணம் முன் கண்ணாடி உடைக்கப் பட்ட அரசு விரைவுப் பேருந்தின் வழியே இனிதே தொடங்கியது. திருச்சியில் இறங்கும் போது எங்க ஊர் பொன்னியம்மன் திருவிழாவில் சாயங்களைப் பூசி தெருவில் கூத்தாடி செல்பவர் போல கரிப் பூசி இறங்கினேன். காரைக்குடி அழகப்பர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த இரண்டு வாரங்கள் என் அந்தரங்க எண்ணஙகளை எனக்குள்ளாகவே பேசிக்கொண்டிருக்க வேண்டிய ஒரு நிலையில் மட்டுமே இருந்தேன். என் ஊர்க்காரன் தணிகா நீ homesick ன்னு கேட்டபோது நான் முழித்த முழி நான் எப்படி 18 வருஷம் ஒரெ வீட்டில் இருந்துட்டு இப்படி ஒரு இடத்துல வந்து இருக்கேன்னு அவனுக்கு புரிஞ்சுடுச்சி.இந்த வாரம் எல்லாரும் ஊருக்கு போலாம்னு இருக்கோம் நீயும் வான்னு சொல்லிட்டுப் போனான். எப்போதுமே அதிக அனுப‌வங்களைத் தந்தது...