கல்லூரி காலங்களில் தேர்வுகளுக்கு அறை நண்பன் அப்துல் எங்களுக்கு பாடம் சொல்லித் தருவதுண்டு. சில நேரங்களில் அவன் சொல்லித் தருவதற்கு பதில் வரிக்கு வரி படிக்க ஆரம்பித்து விடுவான்.அந்த சமயங்களில் முத்து அவனை கிண்டல் செய்வதுண்டு. ஆனாலும் பொறியியல் பாடங்களில் அப்படி எதிர்பார்ப்பது நியாயமில்லை தான். ஆனால் எனக்கு சில சமயங்களில் கதை சொல்வதென்பதெ வரிக்கு வரி படித்துக் காட்டுவதாகி விளக்கெண்ணெய் வழிய ஆரம்பித்துவிடுகிறது.
சில நாட்களாக ரேவதி சங்கரனின் குரலில் துப்பறியும் சாம்பு ஒலிப்புத்தகம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர் கதைகளை வரிக்கு வரி படித்துத் தான் காட்டவேண்டும். ஆனால் ஒவ்வொரு கதையிலும் குரலிலேயே மோனோ ஆக்டிங் நடத்துகிறார். தேவனின் ஹாஸ்யங்களை அநாயாசமாய் தன் குரலில் கொண்டு வருகிறார். சாம்பு, வேம்பு, சுந்து பயல் மற்றும் இன்ஸ்பெக்டர் கோபாலன் குரல்களைக் கேட்டுக் கொண்டே தினமும் தூங்கிப் போகிறோம்.
சிறு வயதில் ஒய்.ஜி.மகேந்திரன் நடிப்பில் பார்த்த சாம்பு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் ஒய்.ஜி தவிர்த்து வேறு யாரும் நினைவில் இல்லை. அந்த ஒட்ட வைத்த மூக்கும் தலைக்கு நடுவில் ஒட்டியிருக்கும் வழுக்கையும் நினைவில் இருக்கிறது. நாடகமாக வந்த கதைகள் ஏதும் இப்போது நினைவில் இல்லை. கல்யாணத்தில் நகையை உருண்டைக்குள் மறைத்து வைக்கும் நாடகம் மட்டும் சற்று நினைவில் இருக்கிறது. அடுத்த முறை ஊருக்கு வரும் போது இந்த நாடகங்களின் டிவிடிக்களை வாங்க வேண்டும். ஒய்.ஜி.மகேந்திரனின் ஷெர்லாக் மாமி என்ற துப்பறியும் நாடகங்கள் சில யூ ட்யூபில் உள்ளன. ஆனால் சொல்லிக்கொள்ளும் படி இல்லை.
வேலைக்கு சேர்ந்த பின் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட தேவனின் துப்பறியும் சாம்பு, ஜஸ்டிஸ் ஜகன்னாதன் மற்றும் கோமதியின் காதலன் நூல்களை வாங்கினேன். எந்த உபத்திரவமும் இல்லாத படிக்க எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் எழுத்து தேவனுடையது. எல்லாக் கதைகளுக்கும் ஏறக்குறைய ஒரே மாதிரியான அமைப்புதான். சாம்புவுக்கு உண்மையிலேயே துப்பறிய தெரியாது. ஆனாலும் சாம்புவால் தான் அனைத்து குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்படுகின்றனர். தேவனின் கதைகள் நிகழும் காலம் இந்திய விடுதலைக்கு முன்பு. சென்னையின் பல இடங்களில் கதை நடக்க்கும். சுஜாதாவின் கணேஷ் வசந்தும் சென்னையின் பல இடங்களில் (முக்கியமாக தம்பு செட்டித் தெரு) சுற்றும் நினைவு உடனே வருகிறது. ஊர்களும் இடங்களும் கதைகளின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது உண்மைதான்.

Comments