Skip to main content

Posts

துப்பறியும் சாம்பு - தேவன், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் ரேவதி சங்கரன்

கல்லூரி காலங்களில் தேர்வுகளுக்கு அறை நண்பன் அப்துல் எங்களுக்கு பாடம் சொல்லித் தருவதுண்டு. சில நேரங்களில் அவன் சொல்லித் தருவதற்கு பதில் வரிக்கு வரி படிக்க ஆரம்பித்து விடுவான்.அந்த சமயங்களில் முத்து அவனை கிண்டல் செய்வதுண்டு. ஆனாலும் பொறியியல் பாடங்களில் அப்படி எதிர்பார்ப்பது நியாயமில்லை தான். ஆனால் எனக்கு சில சமயங்களில் கதை சொல்வதென்பதெ வரிக்கு வரி படித்துக் காட்டுவதாகி விளக்கெண்ணெய் வழிய ஆரம்பித்துவிடுகிறது. சில நாட்களாக ரேவதி சங்கரனின் குரலில் துப்பறியும் சாம்பு ஒலிப்புத்தகம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர் கதைகளை வரிக்கு வரி படித்துத் தான் காட்டவேண்டும். ஆனால் ஒவ்வொரு கதையிலும் குரலிலேயே மோனோ ஆக்டிங் நடத்துகிறார். தேவனின் ஹாஸ்யங்களை அநாயாசமாய் தன் குரலில் கொண்டு வருகிறார். சாம்பு, வேம்பு, சுந்து பயல் மற்றும் இன்ஸ்பெக்டர் கோபாலன் குரல்களைக் கேட்டுக் கொண்டே தினமும் தூங்கிப் போகிறோம். சிறு வயதில் ஒய்.ஜி.மகேந்திரன் நடிப்பில் பார்த்த சாம்பு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் ஒய்.ஜி தவிர்த்து வேறு யாரும் நினைவில் இல்லை. அந்த ஒட்ட வைத்த மூக்கும் தலைக்கு நடுவில் ஒட்டியிருக்கும் வழுக்கைய...

டோட்டோ-சான் ஜன்னலில் ஒரு சிறுமி

படித்த பள்ளிக்கூடங்களைப் பற்றி பேசுவதும் எழுதுவதும் உவகை தரும் செயல். நாம் படித்த பள்ளிகளின் மேல் எப்போதுமே நன்மதிப்பு (அல்லது இப்போது இருப்பது சரியில்லை என்பதால் ஏற்படும் ரொமாண்டிசிச எண்ணம்) இருக்கும். கடந்து வந்த பாதைகளுக்கு சரியான தொடக்கம் நம் பள்ளிகள்தான். ரயில் பெட்டிகளே வகுப்பறையாக இருந்த ஒரு பள்ளியைப் பற்றிய கதையே இந்த புத்தகம். சம்பிரதாயமான வார்த்தைகளால் இந்த புத்தகத்தைப் புகழாமல், புத்தகத்தைப் பற்றியும், எனக்கு புரிந்ததைப் பற்றியும் இங்கு எழுதி வைக்க தோன்றியது. ஜப்பானின் டோக்கியோவுக்கு அருகில் இருந்த டோமோயி ஹாகுன் என்ற பள்ளியைப் பற்றிய கதைதான் இந்த புத்தகம். அந்த பள்ளியில் படித்த டெட்சுகோ குரோயாநாகி என்ற பெண் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். சோசாகு கோபயாஷி என்பவர் இந்த பள்ளியை 1937 இல் தொடங்கினார். 1945 இல் இரண்டாம் உலகப் போரின் போது குண்டு வீச்சுகளால் பள்ளி தீயில் எரிந்து அழிந்தது. வெறும் 8 ஆண்டுகளே இருந்த ஒரு பள்ளி இன்று ஜப்பானின் பாட புத்தங்களில் கூட இடம்பெற்றிருக்கிறது. புத்தகம் வெளியிடப்பட்ட முதல் ஆண்டே 45 இலட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது. டோட்டோ-சான் என்ற சிறுமி ஒரு பள...

சமீபத்தில் வாசித்தவை

சமீபகாலமாக புத்தக வாசிப்பு குறைந்தே இருந்தது. திடீரென்று தோன்றியதோ என்னவோ மறுபடியும் வாசிப்பின் சுகம் கிட்டியிருக்கிறது. சொன்னால் நம்ப மாட்டீர்கள் எளிமையாக, படிக்க சுகமான அனுபவங்கள். சின்ன அண்ணாமலை அவர்களின் நட்புகள் எனக்கு ஏறக்குறைய நாடக, திரைப்பட நடிகர், எழுத்தாளர் பாரதிமணி அவர்களை ஞாபகப்படுத்தியது. ராஜாஜி மீதான அவரின் பக்தி. கல்கியுடனான அவரின் நட்பு ஆச்சரியமாகவே இருந்தது. இவர் நடந்து வருகிறாரென்று கல்கி ஒரு காரையே இவருக்கு பரிசளித்திருக்கிறார். விடுதலைப் போரட்டத்தில் கைதுசெய்யப்பட்டு திருவாடனை சிறையில் அடைப்பட்ட இவரை மக்கள் சிறையை உடைத்து மீட்டுள்ளனர். அதன் பின் நடந்த துப்பாக்கிச் சூடு பயங்கரமானது. ஆனால் சாதாரணமாக சொல்லி செல்கிறார். இளமையில் மலேசியா பினாங்கில் இருந்து ஆங்கிலேயர்களால் இந்தியாவிறகு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். மபொசியினுடனான நட்பை மிகவும் பெருமையான ஒன்றாக எண்ணியிருந்திருக்கிறார். தமிழ்பண்ணை பதிப்பகம் ஆரம்பித்து நல்ல நூல்களை பதிப்பித்திருக்கிறார். மிக முக்கியமாக திமுகவை எதிர்க்கவும் காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்க்கவும் நடிகர் சிவாஜி கணேசனுக்கு நடிகர் மன்றம் ஆர...

எங்கள் மகன் பிறந்த கதை!

என் மனைவியின் பிரசவக் கதையை எழுத ரொம்ப ஆசைப்பட்டேன். என் எழுத்து யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, சுகன்யாவுக்கு பிடித்திருப்பதால் கண்டிப்பாக எழுத ஆசை. 2011 ஏப்ரல் கடைசி வாரம் நிச்சயம் 2010 ஏப்ரல் போலவே நினைவில் என்றும் தங்கி இருக்கும். கடந்த ஏப்ரலில் திருமணம், திருமணத்திற்கு முந்தைய வாரம் லாஸ் வேகஸில் நடந்த OAUG Colloborate 10 இல் பங்கேற்கக் கிடைத்த வாய்ப்பென நிறைய மகிழ்ச்சியான தருணங்கள். இந்த வருடம் APICS CSCP தேர்வு முடிவு, முதல் திருமண நாள் மற்றும் குழந்தை :) சுகன்யாவிற்கு 8 ஆம் மாதம் ஆரம்பித்தவுடன் அத்தையும் மாமாவும் சிங்கப்பூர் வந்தனர். குழந்தைக்கு முதல் 6 மாதங்களுக்கு தேவையான அனைத்தையும் அண்ணா நகர் JUST BORN இல் பெட்டி நிறைய வாங்கி வந்திருந்தனர். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மார்ச் மாதத்தில் விசாவிற்கு விண்ணப்பித்திருந்தோம். ஏப்ரல் முதல் வாரத்தில் விசா கிடைத்து விட்டது. ஏப்ரல் 21 ஆம் தேதி வந்திறங்கினர். முதல் முறையாக வெளி நாட்டிற்கு வந்தாலும், சிங்கப்பூர் என்பதால் சுலபமாக வந்து சேர முடிந்திருந்தது. மறுபடியும் பெட்டி நிறைய பொருள்கள் :) திருமண நாளை ஒட்டியே பிரசவம் இருக்குமென எதி...

அஞ்சலி - எஸ்.வி.ராமகிருஷ்ணன்

ஹைதராபாத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு எஸ்.வி.ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்தேன். கவிஞர்.வா.மணிகண்டன் தான் என்னை எஸ்.வி.ஆருக்கு அறிமுகப்படுத்தினார். எனது அலுவலகம் எஸ்.வி.ஆரின் வீட்டுக்கு அருகில் இருந்ததால் மாலை நேரங்களில் அவரது வீட்டுக்கு செல்வது வழக்கம். ஹைதராபாத் திரைப்பட சங்கத்தின் திரைப்படங்களை அமீர்பேட் சாரதா ஸ்டுடியோஸிலும் சில சமயம் எல்.வி.பிரசாத் ப்ரிவ்யூ திரையரங்கிலும் காண முடியும். வார நாள்களில் திரைப்படம் என்றால் எஸ்.வி.ஆர் -உடன் செல்வது வழக்கம். மற்ற நாள்களின் மாலை நேரங்களில் பஞ்சாரா ஹில்ஸ் தாவரவியல் பூங்காவி்ல் ஒரு மணி நேரம் போல அவருடன் பேசிக்கொண்டே நடப்பது தான் வேலை. விடாமல் பேசிக் கொண்டே இருப்பார். சமகால வரலாறில் பெரிதும் ஈடுபாடு உடையவர். ரொம்ப சாதரணமாக பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியைப் பற்றிப் பேசுவார். எழுத்தாளர் அசோகமித்திரன், இ.பா, திலிப்குமார், க்ரியா ராமகிருஷ்ணன், திருப்பூர் கிருஷ்ணன், தி.க.சி போன்ற பலரைப் பற்றி அவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். 2008 புத்தகக் கண்காட்சியின் போது திலிப்குமாரையும், க்ரியா ராமகிருஷ்ணனையும் சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டேன். க்...

லாலேட்டனும் ஆழ்வார்பேட்டை ஆண்டவரும்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல திரைப்படம் பார்த்த உணர்வு. தொய்வில்லாமல் ஒரு நல்ல திரைக்கதை. எழுத்தாளர்கள் திரையில் பளிச்சென்று தெரிய ஆரம்பித்துவிட்டனர். சுஜாதாவின் தாக்கமும் தெரிகிறது! தியேட்டர்களில் அடிக்கடி கைத்தட்டல்களும் சிரிப்புகளும். லட்சுமியும் லாலேட்டனும் பேசும் வசனங்களும் அவர்களின் உடல்மொழியும் கச்சிதமாக படமாக்கப்பட்டிருக்கிறது. மோகன்லாலின் screen presence மிக நன்றாக இருக்கிறது. கமல் கொஞ்சம் subdued ஆக நடித்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். ஆனால் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். இருவரும் இறுதியில் சந்திக்கும் காட்சியில் மோகன்லாலே முன்னால் தெரிகிறார். ஒரு சாமானியனின் உடல்மொழிக்கு கமலஹாசனின் உடல்வாகும், நடையும் பொருந்தவில்லையோ என்று தோன்றுகிறது. நல்லவேளை திரைப்படத்தில் பாடல்கள் இல்லை. படமும் 2 மணி நேரங்களில் முடிந்துவிட்டது. அல்லா ஜானே மட்டும் திரையில் பின்னணியில் கேட்க கிடைத்தது. மனுஷ்யபுத்திரனுடன் பேசியபோது தான் அந்த ஒரு பாடலை மட்டுமே எழுதியதாகவும் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய பாடல் கமலே எழுதியது என்றும் கூறினார். அவர் கவிதைகளைப் போலவே அல்லா ஜானே பாடலும் ஒரு நம்பிக்கை இழந்த ஜீவனின் குர...

2008 - கடந்து வந்தவை (சுஜாதா, இருளர்கள், காஞ்சிவரம்)

2008 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஹைதராபாத்தில் இருந்தேன். பெங்களூரைப் போன்ற எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாத புத்தாண்டு தினம். ஆண்டுதோறும் பொங்கல் சமயத்தில் ஊரில் நடக்கும் கிரிக்கெட் தொடரில் இந்த ஆண்டும் நாங்களே கோப்பையைக் கைப்பற்றினோம். ஐந்தாவது முறையாக இத்தொடரில் வென்று(?) கோப்பையைக் கைப்பற்றினோம். கேள்விக்குறிக்கு ஒரு காரணம் இருக்கிறது. இதுவரை ஐந்து முறை இந்த போட்டித்தொடர் நடந்துள்ளது. முதல் மூன்று முறை போட்டியை நடத்தும் அணி நேரடியாக அரையிறுதியில் விளையாடியது :) கடைசி இரண்டு முறை நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடியது. இதை யாரும் கேட்பதுமில்லை. அனைவருக்குமே ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டுமென்ற ஆசை மட்டுமே உள்ளது. தோற்பது ஜெயிப்பது பற்றி யாரும் பொருட்படுத்துவதில்லை. ஏறக்குறைய அனைவருமே ஊரில் ஒரே சமயத்தில் இருக்கும் நாட்கள் என்பதால் இது ஒரு கூட்டு சந்திப்பு போலவே நடக்கிறது. 2009 ஆம் ஆண்டும் நடக்கும் :) கோப்பை யாருக்கென்று பார்ப்போம். பிப்ரவரி மாதத்தின் ஒரு இரவு நேரத்தில் எழுத்தாளர் சுஜாதா மறைந்த செய்தி வந்தது. வாசகனாக இந்த ஆண்டின் பெரிய இழப்பென உணர்ந்த சம்பவம். 2008 இன் முதல் ஆறு மாதம் ஹைதரா...