Skip to main content

Posts

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

Chasing The Monsoon – Alexander Frater

I first heard of this book from a friend who said one of the sessions in 2018 Vishnupuram Ilakkiya Mukaam (every year in Ooty Narayana Gurukulam) was on this book. Along with a few of my friends, I traveled to the Kanniyakumari district in 2019, when the southwest monsoon was in full flow. We thoroughly enjoyed and immersed ourselves in the deluge in those few days. I started this book in the memory of my monsoon travel. Like before, this small write-up is an appreciation of the book. I love the sentences when it sounds lyrical and poetic. As the writer chases the monsoon, the rhythmic prose comes alive just like the monsoon rains. One such vivid monsoon remark - The wind drops, it gets very dark, there is terrific thunder and lightning and then – the deluge! Suddenly the air is very cool and perfumed with flowers. It is a time of rejoicing. And renewal. Let me share more of such lines I love at the end, just for my revisits. A visit to a neurologist sowed the idea for this t...

கி ரா மற்றும் கோபல்ல கிராமம்

எழுத்தாளர் கிராவின் கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், மறைவாய் சொன்ன கதைகள், கிடை (குறுநாவல்), மாயமான் தொகுப்பில் சில கதைகள் மற்றும் கி.ராஜநாரயணன் கதைகள் தொகுப்பில் சில கதைகள் என வாசித்திருக்கிறேன். புதுவை இளவேனில் தொகுத்த உயிர்க்கோடுகள் நூலின் சில பகுதிகளை கிராவின் எழுத்துக்காகவும் ஓவியர் ஆதிமூலத்தின் அழகான கோட்டோவியங்களுக்காவும் படித்திருக்கிறேன். கோபல்ல கிராமம் நாவலை முதன் முதலில் 2007 ஆம் ஆண்டு வாசித்தேன். நான் வாசித்த கிராவின் முதல் நூல் அது. அனைவரையும் போல அழகான வட்டார எழுத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்போது வாசிக்கும் போது புதிய சில தெளிவுகள் கிடைத்தன.  விடியலை இரவு உயிர்களை முன்வைத்து சொல்லியிருப்பதே அழகாயிருந்தது ( இரவு தூங்க ஆரம்பித்துப் பகல் விழிக்கப் போகும் நேரம். ) பசு / எருமை, தென்னை/பனை போன்றவற்றை பிரம்மா விஸ்வாமித்திரனை முன்வைத்து கிரா எழுதியிருப்பது  // போட்டி உலகத்தை உண்டாக்கிய விஸ்வாமித்திரன்தான் பசுமாடுகளுக்குப் போட்டியாக எருமை மாடுகளையும், தென்னைமரத்துக்குப் போட்டியாக பனை மரத்தையும், மூஞ்சூறுக்குப் போட்டியாக பெருச்சாளியையும் உண்டாக்...

My Husband And Other Animals 2

 I liked the first part of this book and enjoyed it quite a lot. I also wrote a brief on that book (https://www.goodreads.com/topic/show/21297423-2020#comment_208381628). I felt this book fades a bit compared to the first one. There are more personal incidents about Rom, his grandma, Janaki's growing years, their life together.  Also, there are some interesting changes as she wrote more about western ghats in this one. The foremost is the Agumbe & the King Cobras. I liked the chapter on the increasing population of jungle chickens (jungle fowls). Theodore Baskaran wrote about the increasing population of Jungle fowls in Sholas. There is mention about the famous coffee Luwak (Kopi Luwak). I was in Yogyakarta (pronounced Jogjakarta) in 2015. I went to the (BBC) famous Mataram Kopi Luwak and tasted the coffee. I have been drinking coffee since I was 5 years old. I couldn't find any differences, be it good or bad. Though the thought makes you squirm a bit, the coffee was nice ...

அழகர் கோயில் மற்றும் அறியப்படாத தமிழகம்

  நாட்டாரியல் ஆய்வாளர் தொ.பரமசிவனின் அறியப்படாத தமிழகம் புத்தகத்தின் சில பகுதிகளை முன்பே படித்திருக்கிறேன். பண்படுதல் குழும வாசிப்புக்காக அறியப்படாத தமிழகம் மற்றும் அழகர் கோயில் புத்தகங்களை இப்போது படித்தேன். ஏற்கனவே திரு அ.கா.பெருமாளின் ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் நூலை முழுமையாகவும் சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயம் நூலின் சில பகுதிகளையும் படித்திருக்கிறேன். திரு.அ.கா.பெருமாளின் சில நாட்டாரியல் ஆய்வு நூல்களையும் படித்திருக்கிறேன். அவற்றை வாசிப்பது எப்போதும் மகிழ்ச்சியையும் பால்ய காலத்தின் நினைவுகளையும் தூண்டும். கிராமத்தின் எல்லாத்திசைகளிலும் ஏரி, ஏரிக்கொரு காவல் தெய்வமென்னும் ஊரில் பிறந்து வளர்ந்ததால் இருக்கும். இரண்டில் எனக்கு பிடித்த நூல் அழகர் கோயில் தான். சங்க காலத்திலிருந்து இன்று வரை வாழும் ஆலயத்தை மையமாகக் கொண்ட கதைகள், வரலாற்று சம்பவங்கள் என ஏராளமான தகவல்களைத் திரட்டி தொகுத்தளித்திருக்கிறார்.  காஞ்சிபுரத்திலிருக்கும் வரதராஜப் பெருமாள் (தேவராஜர், அத்தி வரதர், கரி வரதர் என்ற பெயர்களுமுண்டு) சித்திரை பௌர்ணமியில் தெற்கு நோக்கி ஏறக்குறைய பத்து கிராமங்களுக்கு வந்து, எங்களூரில...

2020

2014 ஆம் ஆண்டில் கனடா மற்றும் அமெரிக்க நிறுவனப் பணிகளின் போது சில (5) மாதங்கள் வீட்டிலிருந்தே பணிபுரிந்தேன். அதற்குப் பிறகு இப்போதுதான். தொடர்ச்சியாக 11 மாதங்கள் வீட்டிலிருந்தே வேலை.  அனைவருக்கும் கொரானா. எனக்கிருந்தது வேறு. 2019 டிசம்பரில் தொடங்கி மூன்று முறை அறுவை சிகிச்சை அறைக்கு சென்று வந்தாகிவிட்டது. சிகிச்சைக்காக குழந்தைகளை சிங்கப்பூரில் விட்டுவிட்டு இந்தியா வந்து திரும்பினோம். திரும்பின இரண்டாம் நாளே அனைத்து விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன. Close Shave. இந்தியாவில் அறுவைசிகிச்சை முடிந்து ஒரு நாள் ஓய்வெடுத்துத் திரும்பும் வகையிலென்றால் சிங்கப்பூரில் அதே சிகிச்சை காலை 10 மணிக்கு சென்று பிற்பகல் 2 மணிக்கு திரும்பும் வேகத்தில் நடந்தது. அன்று மாலையே வேலையைத் தொடரவும் செய்தேன். கடுமையான வேலை இருக்கும் போதெல்லாம் எழுத்தாளர் பா.ராகவனின் “கடுமையான வேலையைப் போன்ற வேறு தியானம் இல்லை” (நினைவிலிருந்து) என்ற வரி ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது. ஞாபகம் வரமால் இருக்க ஒரு வழி செய்யணும். ஆண்டு இறுதியில் நாங்களும் இந்த ஆண்டின் உருவாக்கமான Staycation இல் இருந்து விட்டு வந்தோம். குழந்தைகளை ஏறக...

பறவைக்கு கூடுண்டு - அனைவருக்கும் வீடு - லாரி பேக்கரின் கனவு

கிண்டில் அன்லிமிடெட் இல் இருக்கும் நூல்களை பார்வையிட்டுக்கொண்டிருக்கும் போது இந்த நூல் கண்ணில் பட்டது. ஜெயமோகன் தளத்தில் இவரின் அறிமுகம் படித்தது நினைவில் வந்தது. எழுத்தாளர் பவா செல்லத்துரை திருவண்ணாமலையில் சில வீடுகளை பேக்கர் பாணியில் கட்டும் செய்திகளையும் படித்திருக்கிறேன்.  அவற்றினால் கிளர்ந்த ஆர்வத்தில் இம்மாத நூலாக பரிந்துரைத்தேன்.  புத்தகம் கௌதம் பாட்டியா லாரி பேக்கரைப் பற்றி எழுதிய நூலின் ஒரு பகுதியுடன் (முன்னுரை) தான் ஆரம்பிக்கிறது. லாரியின் மனைவி எலிசபெத் பேக்கரின் நினைவுக்குறிப்புகளே இந்த புத்தகமென்றாலும் லாரி தன் பாணி கட்டடக்கலைப் பற்றி எழுதியுள்ள விரிவான அறிமுகமும் இதில் உள்ளது.  ஓய்வு காலத்தில் தங்களுக்கு நினைவில் இருப்பதைச் சொல்கிறோம் என எலிசபெத் அறிமுகக் கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்ச்சிகளைக் கூட துல்லியமாக நினைவில் கொண்டு வந்துவிடுகிறார் (இருவருமே - தனது பர்மா சீன சாகசங்களை லாரியும் நினைவில் வைத்திருக்கிறார்) என்றே தோன்றியது.  மருத்துவர் ஜீவானந்தத்தின் மொழிபெயர்ப்பு ஒழுகும் நீரோட்டத்தைப் போன்ற புத்தகத்தின் உள்ளடக்கத...

அஞ்சலி - க்ரியா ராமகிருஷ்ணன்

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியை 2010 ஆம் ஆண்டு வாங்கினேன். நான் அதை குறைவாகவே உபயோகப்படுத்துகிறேன். என் மகன் ஆங்கில வழியில் நான்காம் வகுப்பு படிக்கிறான். அவன் பள்ளியில் தமிழ் மொழிப்பாடமாகவும் இல்லை. பேராசிரியர் நன்னனின் வீடியோ பாடங்களின் மூலம் என் மனைவிதான் மகனுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தார். அவனுக்கு க்ரியாவின் அகராதிதான் இப்போது பயன்படுகிறது. முதலில் சொற்களைத் தேடுவதில் சிரமப்பட்டாலும் இப்போது அவ்வளவு சிரமப்படவில்லை. அவனுக்கு பிற்காலத்திலும் நிச்சயம் பயன்படும். 2008 இல் ஹைதராபாத்தில் இருந்த நேரத்தில் எழுத்தாளர் எஸ்.வி.ராமகிருஷ்ணன் என்னை க்ரியா ராமகிருஷ்ணனுக்கு அறிமுகப்படுத்தினார். சென்னைக்கு போகும் போது ஓரிரு முறை க்ரியா பதிப்பக விற்பனை நிலையத்துக்கும் போனதுண்டு. சிரித்த முகத்துடன் அவரே புத்தகங்களை உடன் இருந்து தேர்ந்தெடுத்து அளிப்பார். நன்றி க்ரியா ராமகிருஷ்ணன் சார். அஞ்சலிகள் 😢

திருநெல்வேலி சரித்திரம் - இராபர்ட் கால்டுவெல்

வரலாற்றுப் புத்தகங்கள் தரும் வாசிப்பின்பம் அதிகம்தான். ஏறக்குறைய கால யந்திரத்தில் பயணிப்பதைப் போலத்தான். திருநெல்வேலியைப் பற்றி சங்க காலத்திலிருந்து 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால கட்டம் வரை ஏறக்குறையத் தொடர்ச்சியாக எழுதியுள்ளார். இந்த நூல் வெளியான காலகட்டத்தில் தமிழருக்கும் இந்தியருக்கும் இம்மாதிரியான வரலாற்று நூல் பெரும் ஆச்சரியத்தை அளித்திருக்கும். தமிழ்நாட்டைப் பற்றி மட்டுமல்லாமல் ஓரளவிற்கு தென்னிந்தியா பற்றியும் நிறைய தகவல்களை சேகரித்து எழுதியுள்ளார். அவருக்கு பிற நூல்களும் கடிதங்களும் தான் முக்கியமான ஆதாரமாக இருந்திருக்கிறது. 15ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய சில தகவல்கள் பிற்கால ஆய்வுகளால் மாறியிருக்கின்றன. ந.சஞ்சீவி படிக்க சுவாரசியமாகவே இதைத் தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். அநேக இடங்களில் அடைப்புக்குறிக்குள் அவரின் கருத்தை எழுதியிருப்பது சற்று ஆயாசமாக இருக்கிறது.  பாளையக்காரர்களின் போர்களைப்பற்றிய இடங்களில் ஏறக்குறைய விளையாட்டு வர்ணனை அளவுக்கு இந்த அடைப்புக்குறி கருத்துகள் இருக்கின்றன.  அதுவும் அவரின் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இந்த கருத்துகள் இருக்கின்றன. அவரின் மொழிபெய...

Mauve - How One Man Invented a Color That Changed the World

நண்பர்களுக்கு வணக்கம். என் பெயர் வெங்கடாசலம். நான் Popular science எனும் வகைமையைச் சார்ந்த Mauve எனும் புத்தகத்தை அண்மையில் படித்தேன். புத்தகத்தைப் பற்றிய சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன். முதன்மையாக இது ஒரு வாழக்கை வரலாற்று நூல். William Perkin எனும் வேதியியல் விஞ்ஞானியின் வாழ்க்கை, அவரின் கண்டுபிடிப்பு மற்றும் அதனால் தொழிற்துறையிலும் அறிவியல் துறையிலும் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தாக்கங்கள் தான் புத்தகத்தின் சாரம். முதலில் William Perkin பற்றியும் அவர் எவ்வாறு இந்த கண்டுபிடிப்பை நோக்கிச் சென்றார் என்றும் பார்ப்போம். William Perkin 1838 இல் பிறந்தார். அவர் தந்தை தச்சுத்தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். பெர்கினுக்கு இளைய வயதில் நிறைய விஷயங்களில் ஆர்வம் இருந்தது. வேதியியல் ஆர்வம் பின்னாட்களில் தான் வந்தது. ஆனால், அவரின் தாத்தா ரசவாதி என பெயர் பெற்றிருந்தார். இப்போது அக்காலத்தில் இருந்த அறிவியல் தேவைகளையும் பிற முன்னேற்பாடுகளைப் பற்றியும் சில வார்த்தைகள். 19ஆம் நூற்றண்டில் வெப்பமண்டல காலனிய நாடுகளில் இருந்த ஆங்கில சிப்பாய்கள் நிறைய பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். ...

ஊதா கலரு டை…

I will have to start with a quote. ‘I was then eighteen. While working on an experiment, I failed, and was about to throw a certain black residue away when I thought it might be interesting. The solution of it resulted in a strangely beautiful colour. You know the rest.’ An 18-year-old boy, with none of the modern-day gauging equipment, discovered a colour that changed the world of chemistry from theoretical, experimental studies to a world industry. The prospect of wealth through chemistry gave birth not only to the artificial colours but changed the world of modern medicines, perfumes, explosives, Canned food preservatives, photography and many more. Outside the home where he born, the following is written in a plaque “Sir William Henry Perkin, FRS, discovered the first aniline dyestuff, March 1856, while working in his home laboratory on this site, and went on to found science-based industry.” I emphasize the important words – “went on to found science-based industry”. Wh...

My Husband and Other Animals

I read this book for the third time. I love to read books about wildlife and ecology. I read Theodore Baskaran, AJT John Singh, Davidar and Ullas Karanth. The difference here is the complete change in the kind of wildlife we read. Just like the great Romulus Whitaker, his wife Janaki Lenin also loves the amphibians and the reptiles. We hardly see people writing about frogs, shrews, Porcupines, crocs and lots and lots of snakes. What started as the Madras Crocodile Park’s newsletter changed to a newspaper article and took the avatar as one of the best books in India for lesser-known wildlife. I loved Romulus Whitaker’s இந்திய பாம்புகள். It is more of a field guide, and I refer at times. The pleasure of the text is such an important thing these days to get hooked into the book. This book is way up there as a page-turner. However, we encounter so many snakes and crocodiles that I often have to stop reading and browse to find the images and videos (e.g. Taipan, Mambas, moccasin, red snak...

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - ஜெயமோகன்

2007 அல்லது 2008 ஆம் ஆண்டு வாக்கில் இந்த புத்தகம் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்த சமயத்தில் படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் ஓரளவிற்கு படிக்க ஆரம்பித்திருந்ததால் இந்நூலை படிப்பது சிரமமாக இருக்கவே வைத்து விட்டேன். இப்போது முழுதாக படிக்க முடிந்தது. கோட்பாடு சார்ந்த பகுதிளைத் தவிர்த்து மற்ற பகுதிகள் படிப்பதற்கு இனிமையாகவே இருந்தது. ஜெயமோகனின் கட்டுரைகளின் பிரதியின்பம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த நூலின் சில கட்டுரைகளைத் தனியாக படித்திருக்கிறேன். நூலில் நான்கு பெரும் பிரிவுகளில் முதல் மூன்று எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அறிமுகம் மற்றும் அடிப்படைகள் பகுதிகளை இரண்டு முறைக்கு மேல் வாசித்தேன். இனிமேலும் அடிக்கடி வாசிப்பேன் என்றே நினைக்கிறேன். இதுவரை தமிழ் நவீன இலக்கியத்தின் வளர்ச்சிகள் மற்றும் போக்குகளை புரிந்துகொள்ள வரலாறு பகுதி உதவியது. நூலில் 800க்கும் மேற்பட்ட இடங்களை குறித்து வைத்துள்ளேன். இந்த நூல் ஏறக்குறைய ஒரு பாடபுத்தகம் மாதிரி தான். வாசகனாக இந்த நூலை பாட நூலாக அணுகினாலும் இந்த நூலின் தெளிவான விளக்கங்களும் பிரதியின்பமும் முக்கியமானவை. பாடப்புத்தகங்களில் எளிதில் கிடைக்காத பண்ப...

2019 ஆம் ஆண்டின் சில நினைவுக்குறிப்புகள்

இந்த ஆண்டு முழுக்க பயணம் இருந்து கொண்டே இருந்தது. ஆண்டின் பெரும்பகுதி பாங்காக் நகரத்தில் கழிந்தது. ஒரு முறை ஜகார்த்தாவிற்கு செல்ல வேண்டியிருந்தது. நண்பர்களுடன் தமிழ்நாட்டின் அருவிகளுக்கு (முக்கியமாக மேற்கு மலைத்தொடர்ச்சியோரம்) ஒரு சாலை வழிப் பயணம் சென்றேன். சென்னையில் கிளம்பி திற்பரப்பு, காளிகேசம், களக்காடு தலையணை அருவி, அகத்தியர் அருவி, மணிமுத்தாறு, குற்றாலம், குண்டாறு அருவி, கும்பவுருட்டி, சின்னச்சுருளி மற்றும் கும்பக்கரை சென்று திரும்பினோம். கன்னியாகுமரி முழுக்க ஜெயமோகன் கதைகளில் இறங்கி திரிவது போல இருந்தது. ஆரல்வாய்மொழி கணவாய், திற்பரப்பு அருவியின் இரவு, ஆற்றங்கரையோர இசக்கி (யக்‌ஷி), ரப்பர் மரங்கள், மகாதேவர் ஆலயம், திருவட்டாறில் நாகப்பிரதிஷ்டை செய்த அரசமரம், கதகளி அரங்கம், கீரிப்பாறை, பழம்பொறி, ரசவடை என. நாங்கள் ஜூலை முதல் வாரத்தில் பயணித்தோம். திருநெல்வேலிக்கு வடக்கே ஒரு அருவியிலும் நீரில்லை. திற்பரப்பிலும், காளிகேசத்திலும், களக்காடு தலையணையிலும் ஊறிப்போய் வந்தோம். இந்த ஆண்டு விஷ்ணுபுர வாசக வட்டத்தின் ஊட்டி காவிய முகாமில் கலந்து கொண்டேன். மூன்று நாட்களும் உற்சாகமாக இருந்தது. ...

பாம்பின் கண் - தியடோர் பாஸ்கரன்

தியடோர் பாஸ்கரன் ஆங்கிலத்தில் எழுதிய The Eye Of The Serpent என்ற நூலை திரு.லதானந்த் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நான் தியடோர் பாஸ்கரனின் எம் தமிழர் செய்த படம் என்ற நூலை முன்பே வாசித்திருக்கிறேன். இந்த நூல்தான் முதலில் எழுதப்பட்டது என்றாலும், ஏற்கனவே எம் தமிழர் செய்த படம் புத்தகத்தில் உள்ள தகவல்கள் நிறைய இதிலும் உள்ளதால் படிப்பதிலுள்ள ஆர்வம் சற்று மட்டுப்பட்டது. தியடோர் பாஸ்கரனின் அழகிய சரளமான பத்தி மொழி எழுத்து எனக்கு மிகவும் பிடித்தது. கானுயிர் சார்ந்த தமிழ் எழுத்தில் முன்னோடியான அவரின் கானுயிர் நூல்கள் மகத்தானவை. தமிழ் திரைப்பட வரலாற்றில் அவர் அளவுக்கு மௌன படங்களையும் ஆரம்ப கால பேசும் படங்களையும் ஆராய்ந்தவர்கள் இல்லையென்றே நினைக்கிறேன். ராண்டார் கை சில நூல்களை எழுதியுள்ளார் என்பது தெரிந்தாலும், ராண்டார் கை சென்னையை மையமாகக் கொண்டே நிறைய எழுதியுள்ளார். தியடோர் பாஸ்கரனின் முக்கியமான அவதானிப்புகளில் ஒன்று திரைப்படம் மதச்சார்பற்ற கலை வடிவம் என்பது. இந்தியாவின் பாரம்பரிய கலைகள் கோயில் பண்பாட்டை ஒட்டியே இருந்ததால் அவை கலைகள் ஆயினும் மதத்தோடு கொண்ட தொடர்பு தவிர்க்க முடியாததாயிற...

நினைவு அலைகள் - டாக்டர் தி சே செள ராஜன்

நவீன தமிழிலக்கியத்தின் முதல் விமர்சகராகக் கருதப்படும் க நா சு வின் பரிந்துரைகள் இன்னமும் முக்கியமானவையாகவே கருதப்படுகின்றன. அவர் இந்த நூலைப் பற்றி உயர்வாகவே எழுதியுள்ளது இந்த புத்தகத்தைப் பரிந்துரைக்க ஒரு காரணம். நான் ராஜனின் தமிழ் நாட்டில் காந்தி படித்திருக்கிறேன். அவரின் எளிய நடை அப்போதே பிடித்திருந்தது. இந்த நூலின் நடையைப் பற்றியும் சொல்ல வேண்டும். இந்திய சுதந்தரப் போரட்ட வரலாற்றின் பெரும் மனிதர்கள் இவரின் எளிமையான மொழி நடையில் இயல்பாக வந்து போகின்றனர். அலங்காரங்களற்ற மின்னும் எளிமையின் அழகு படிக்க இனிமையானது. தொழில் முறையில் மருத்துவரான இவருக்கு எளிய தமிழ் வாய்க்கப்பெற்றிருக்கிறது. அவரது வைணவ பின்புலம் நிச்சயம் உதவியிருக்கிறது. இளமையில் ஏழ்மையில் தான் இருந்துள்ளார். ஆனால் ஏழ்மை ஒரு சாதாரணமான விஷயமாகத்தான் இருந்திருக்கிறது. உறுதியோடு மருத்துவம் பயின்று பர்மா சென்றிருக்கிறார். தன் வரலாற்று நூலைப்பற்றி எழுத நேரும் போது புத்தகத்தின் தகவல்களை எழுத நேர்ந்து விடுகிறது. நாம் அறிந்த காலகட்டத்தில் நமக்கு தெரிந்த வரலாற்று தகவல்களின் இடைவெளிகளில் ஒளி பாய்ச்சியிருக்கிறார் ராஜன். வெறும் த...

The Tamarind City - A Time Well Spent In Chennai

I came to know about this book a few years before. It became part of my wishlist, aka as the long guilt road that I so painfully built with at least 500 books. When I started this group, I had discussions with my friends, and I understand that it is not easy for everyone to buy a book every month. My search narrowed to look for Kindle Unlimited books and the public library books. Though it was in my wishlist, I wouldn’t have selected this book had it not been part of the Kindle Unlimited. I read the Tamil translation of S.Muthiah’s Chennai Rediscovered (சென்னை மறுகண்டுபிடிப்பு - https://www.nhm.in/shop/9788184932348.html). It is almost like a detective story unearthing the known places and finding a story behind each one of them. I know this book won’t do the same thing. I read some articles of Bishwant Ghosh, and the journalistic writing style is a mouth-watering one for reading essays. I also liked the way the book is titled. I grow up in the northern part of Tamilnadu where Tamari...

பாயும் தமிழகம்

ஐயங்கார்குளத்தில் ஒரு காலத்தில் பச்சியப்பா என்ற பெயர் கொண்ட ஆழ்குழாய் கிணறு தோண்டும் லாரியை அடிக்கடி காண முடியும். பட்டுச்சேலை நெசவுத்தொழிலின் வளமான காலங்களில் ஒன்று. பாயும் தமிழகம் நூலைப் படித்தவுடன் நினைவில் வந்தது. 1960 களில் கடும் தண்ணீர் பஞ்சத்தால் தவித்த திருச்செங்கோடு விவசாயிகள் ஆழ்துளை கிணறுகளை நீருக்காக தோண்டினர். மெதுவாக விவசாயத்தோடும். அதை விட்டும், ஆழ்துளை கிணறு தோண்டும் தொழிலில் இறங்கி இன்று தென்னிந்தியா முழுக்க அந்தத் தொழிலில் கொடிகட்டி பறக்கின்றனர். அது மட்டுமில்லாமல் அருகிலுள்ள நாமக்கல் பகுதியினர் இந்தத் தொழிலுக்கான உபகரணங்கள் தயாரிப்பதில் முன்னணியிலுள்ளனர். இம்மாதிரி தங்கள் முயற்சியால். உழைப்பால். அர்ப்பணிப்பால் தோன்றி வளர்ந்து இன்றைய தமிழகத்தின் இரத்தினங்களாக பல நிறுவனங்கள் உள்ளன. அம்மாதிரியான ஒவ்வொரு நிறுவனங்களைப் பற்றியும் தனியே ஒரு புத்தகமே எழுதலாம். சுசீலா ரவீந்திரநாத் ஒவ்வொரு நிறுவனத்தின் வரலாற்றைச் சுருக்கமாக எழுதியுள்ளார். முருகப்பா, டிவிஎஸ், அமல்கமேஷன் போன்ற குடும்ப நிறுவனங்கள், நாட்டின் சுதந்தரத்துக்கு முன் தொடங்கப்பட்ட நிறுவனங்கள், வாகன உற்பத்தி, விநியோக...

மெய்வருத்தம் பாரார்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. இந்த குறளுக்கு நமக்கு பொருள் தெரியும். துணிந்தபின் எண்ணுவேன் என்பது இழுக்கு, பின் வேறென்ன செய்ய வேண்டும்? திருக்குறள் மனிதன் அறத்தோடு வாழ வழி சொன்ன தொன்மையான நூல். தமிழில் திருக்குறளின் தொடர்ச்சியான நூலாக 17 ஆம் நூற்றாண்டில் குமரகுருபரரால் எழுதப்பட்ட நீதிநெறிவிளக்கம் கருதப்படுகிறது. அறத்தின் பாற்பட்ட வாழ்வின் அடிப்படைகளை விளக்குகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் எழுத வரும் ஒவ்வொருவரும் தன் முன்னோடிகளின் நூல்களை ஐயந்திரிபுற கற்றிருக்க வேண்டும். குமரகுருபரர் தன்னை தமிழின் நீண்ட இலக்கிய மரபின் தொடர்ச்சியாகவே நிலைநிறுத்துகிறார். கல்வியின் பயனும் சிறப்பும், கல்வியின்பம், கல்விச்செல்வம், புலவர் பெருமை, கற்றன மறவாமை, கல்வியழகே அழகு, பெரியோர் பணிவு, கற்றபடி நிற்றல், மேன்மக்கள் பெருமை, இறைமாட்சி, ஈகை, கருமமே கண்ணாயினார் போன்ற தலைப்புகளில் இன்னிசை வெண்பாக்களாக இயற்றியுள்ளார். ஏறக்குறைய திருக்குறளின் அதிகாரங்களையே நினைவுபடுத்தும். அதில் ஒரு வெண்பா மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார் எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி அ...