Skip to main content

Posts

சிறுதெய்வ வழிபாடும் அவற்றின் வரலாறுகளூம்

சிங்கை தேசிய நூலகத்திலிருந்து குறுஞ்சாமிகளின் கதைகள் புத்தகத்தைப் பார்த்தவுடன் வாசிக்கக் கொண்டுவந்தேன். கழனியூரன் தொகுத்து உயிர்மை வெளீயிட்டு இருக்கும் இந்த நூலில் தென் தமிழகத்தின் பல குறுஞ்சாமிகளின் செவிவழி வரலாற்றைத் தொகுத்துள்ளார். "காதல் தோல்வி, தியாக வரலாறு, கலப்பு மணம் என்பன போன்ற உண்ர்ச்சிக் கொ ந்தளிப்பான கதையாடல்கள், இக்குறுஞ்சாமிகளின் பின்னணியில் உள்ளன" என்று தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அவர் தொகுத்துள்ள 23 கதைகளும் இதையே வெளிப்படுத்துகின்றன. புத்தகத்தின் முடிவில் கழனியூரன் ஒரு முக்கியமானக் கோரிக்கையை முன்வைக்கிறார். "பாரததேசம் எங்கும் நிலவும் இத்தகைய நாட்டுப்புற தெய்வங்களின் வரலாறுகள் தொகுக்கப் பட வேண்டும்" இதை யாரேனும் முன்னெடுத்துச் செல்வார்களா என்று தெரியவில்லை. தமிழ் நாட்டின் நிறைய கிராமங்களில் சிறு தெய்வ வழிபாடு நடைமுறையில் இருந்தாலும் அவற்றின் வரலாறு அறிய முடியாததாகவோ இல்லை சானறுகள் இல்லாததாகவோ இருக்கிறது. மேலும் மாரியம்மன் என்ற வழிபாட்டு சிறுதெய்வம் ஏறக்குறைய எல்லா ஊர்களிலும் இருக்கிறது. ஆனால் அவற்றின் வரலாறுகள் பெரும்பாலும் வெவ்வேறாகவே இருக்கின்...

சிங்கையில்

கடந்த ஜூன் மாதம் 7 ஆம் நாள் ஹைதராபாத்திலிருந்து சிங்கைக்கு கிளம்ப வேண்டியிருந்தது. முன் கூட்டியே முடிவு செய்யப்பட்டிருந்த பயணம் என்றாலும் ஊருக்கு போய் சில நாட்கள் தங்கியிருக்க முடியாமல் அவசர அவசரமாய் திரும்பி வந்ததாலோ என்னவோ கொஞ்சம் தடுமாற்றத்துடனே கிளம்பினேன். இரவு 11.50 மணி விமானத்திற்கு 7.30 மணிக்கே கிளம்பிவிட்டேன். 8.15 மணிக்கே RADIO CABS ன் ஓட்டுனர் 8.30 மணிக்கே என்னை ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் இறக்கி விட்டார். ஷம்ஷாபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் பெயருக்கு ஏற்றார் போல நன்றாகவே இருந்தது. ஆனால் மிக நீண்ட, சர்வதேச விமானங்கள் கிளம்பும் இடங்கள் எல்லாம் காலியாகவே இருந்தது. இதெல்லாம் பிரச்சனை இல்லை. மறுநாள் காலையில் என் பெரிய பொட்டியைத் தூக்கிக் தள்ளுவண்டியில் வைத்துவிட்டு தள்ளினேன்.தள்ளமுடியவில்லை. பக்கத்தில் இருந்த ஒரு வெள்ளையர் எப்படி தள்ள வேண்டுமென்று செய்தேக் காட்டினார்.அப்பாடா எங்க ஊர் மானத்தைக் காப்பாற்றி விட்டேன் என்று நினைத்துக்கொண்டேன்.பாங்காக் செல்லும்போது இதை எப்படி செய்யத் தவறினேன் என்று தெரியவில்லை.இங்கு சரியாக செய்துவிட்டேன். சிங்கைக்கு வந்து மூன்று வாரங்களுக்கு...

ஹைத‌ராபாத்தில் ஓர் ஆண்டு

இன்று காலையில் அலுவலக நண்பர்களின் வாழ்த்து செய்திகள் கொஞ்சம் புத்துணர்ச்சியை அளித்தன. இந்நிறுவனத்தில் என்னுடைய இரண்டாம் ஆண்டு தொடக்க நாள். கடந்த ஆண்டு இதே மாதம் 14 ஆம் தேதி சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து சார்மினார் எக்ஸ்பிரஸில் கிளம்பும் போது, கூடிய சீக்கிரம் சென்னைக்கு வந்துவிட வேண்டுமென்ற எண்ணத்துடனே இருந்தேன்.மறுநாள் காலை 8 மணிக்கு செகந்திராபாத் நிலையத்தில் நான் இருந்த பெட்டியிலிருந்து அனைவரும் இறங்கி விட்டனர். நம்பள்ளி நிலையத்திற்கு வந்து சேரும்போது மணி 9 ஆகிவிட்டிருந்தது. அங்கே காத்திருந்த நண்பனுடன் கிளம்பி யூஸுப்குடா வில் இருக்கும் அவனது அறையில் அன்று முழுவதும் இருட்டறையில் தூங்கியவாறே கழித்தேன்.பெங்களூரை விட இங்கு சாப்பிட ஹோட்டல் கண்டுபிடிப்பது பெரிய வேலை என்று முதல் நாளே புரிந்தது.பெங்களூரில் தெருக்கு தெரு சாகர் களும் நந்தினி போன்ற ஆந்திர வகை உணவகங்களும் நிறைந்தே இருக்கும். இதில் சாகர்கள் காபியைத் தவிர வேறு எதற்கும் லாயக்கற்றவை. கோரமங்களா கிருஷ்ணா கேஃப் போன்ற தெய்வ மச்சான்களும் சில இடங்களில் இருப்பார்க‌ள்.ஹைத‌ராபாத்தில் நீக்கமற நிறைந்திருப்பது பிரியாணி தோட்ட‌ங்க‌ளே. 15 ஆம் ...

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...

காரைக்குடியிலிருந்து காஞ்சிபுரம் வரை...

பயணங்களின் அழகியலை நல்ல அனுபவமாகவும் ரசிக்கக் கற்றுக் கொண்டது இந்த காரைக்குடியிலிருந்து மாலை நேரத்தில் தொடங்கி மறுநாள்‍ காலையில் காஞ்சிபுரம் ஐயங்கார்குளத்தில் (பூர்வீகம்) முடிவடையும் ஓர் அற்புதமான பயணத்தில் தான். 2001 இல் கருணாநிதியைக் கைது செய்த அதே தினம் பேருந்துகள் கிடைக்காததால் செங்கல்பட்டில் இருந்து காரைக்குடியை நோக்கிய எனது பயணம் முன் கண்ணாடி உடைக்கப் பட்ட அரசு விரைவுப் பேருந்தின் வழியே இனிதே தொடங்கியது. திருச்சியில் இறங்கும் போது எங்க ஊர் பொன்னியம்மன் திருவிழாவில் சாயங்களைப் பூசி தெருவில் கூத்தாடி செல்பவர் போல கரிப் பூசி இறங்கினேன். காரைக்குடி அழகப்பர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த இரண்டு வாரங்கள் என் அந்தரங்க எண்ணஙகளை எனக்குள்ளாகவே பேசிக்கொண்டிருக்க வேண்டிய ஒரு நிலையில் மட்டுமே இருந்தேன். என் ஊர்க்காரன் தணிகா நீ homesick ன்னு கேட்டபோது நான் முழித்த முழி நான் எப்படி 18 வருஷம் ஒரெ வீட்டில் இருந்துட்டு இப்படி ஒரு இடத்துல வந்து இருக்கேன்னு அவனுக்கு புரிஞ்சுடுச்சி.இந்த வாரம் எல்லாரும் ஊருக்கு போலாம்னு இருக்கோம் நீயும் வான்னு சொல்லிட்டுப் போனான். எப்போதுமே அதிக அனுப‌வங்களைத் தந்தது...

கா(ப்)பியும் காஞ்சிபுரமும்

எங்க‌ வீட்டில‌ எல்லாம் ஒரு நாளைக்கு சாதரணமா அஞ்சு த‌ட‌வ‌ எல்லாம் காப்பிக் குடிக்க‌லாம்.அதுவும் மாசி மக‌ம், ந‌ட‌வா திருவிழான்னா கேட்க‌வே வாணாம்.ஊர்ல‌ இருந்து சொந்த‌ கார‌ங்க‌ batch batch ஆ தான் வ‌ருவாங்க‌. எங்க‌ம்மா ஒவ்வொரு முறையும் அடுப்ப‌ங்க‌ரைக்கு போய் காப்பிய‌ப் போட‌ ஆர‌ம்புச்சுடுவாங்க‌.நாம‌ அப்ப‌டியே வ‌ந்துருக்கிற‌வ‌ங்களுக்கு கொடுக்கும் போது கூட‌ ஒன்னு வாங்கிக்கலாம். நாக்கு எந்நேரமும் தெகட்டிட்டே இருந்தாலும் அத பத்தியெல்லாம் நாங்க கவலைப்படறுதுல்ல.சில சமயம் ஏன் இந்த கச்சபேஸ்வரரும் கரி வரதரும் வருஷத்துக்கு ஒரு முறை மட்டும் வராங்கன்னு தோணும். இதுல‌ என்ன‌ பெரிய‌ விஷ‌ய‌ம்னா ஊர்ல‌ இருக்கிற‌ எல்லாருக்கும் ஒரு 90% சொந்தக்காரங்க காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், ஐயம்பேட்டை(காஞ்சிபுரம் பக்கத்திலயும் ஒன்னு இருக்குது) தான்.இப்ப தக்கோலம் (பொன்னியின் செல்வன்ல வர இராஜாதித்தர் போர் புரிந்த இடம் தாங்கோ) பக்கமும் பொன்னு கொடுத்து பொன்னு எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.மெட்ராஸ்ல எல்லாம் சொந்தகாரங்க தெருக்கு ஒன்னு கூட தேறாது. இவங்க எல்லார் வீட்லயும் காப்பி கதை இத விடப் பெரிய கதை. எங்க அண்ணன் எங்க அம்மாட்ட காப்பி ...

நரசமங்கலம் குடைவரைக் கோயில்கள்