Skip to main content

Posts

The Tamarind City - A Time Well Spent In Chennai

I came to know about this book a few years before. It became part of my wishlist, aka as the long guilt road that I so painfully built with at least 500 books. When I started this group, I had discussions with my friends, and I understand that it is not easy for everyone to buy a book every month. My search narrowed to look for Kindle Unlimited books and the public library books. Though it was in my wishlist, I wouldn’t have selected this book had it not been part of the Kindle Unlimited. I read the Tamil translation of S.Muthiah’s Chennai Rediscovered (சென்னை மறுகண்டுபிடிப்பு - https://www.nhm.in/shop/9788184932348.html). It is almost like a detective story unearthing the known places and finding a story behind each one of them. I know this book won’t do the same thing. I read some articles of Bishwant Ghosh, and the journalistic writing style is a mouth-watering one for reading essays. I also liked the way the book is titled. I grow up in the northern part of Tamilnadu where Tamari...

பாயும் தமிழகம்

ஐயங்கார்குளத்தில் ஒரு காலத்தில் பச்சியப்பா என்ற பெயர் கொண்ட ஆழ்குழாய் கிணறு தோண்டும் லாரியை அடிக்கடி காண முடியும். பட்டுச்சேலை நெசவுத்தொழிலின் வளமான காலங்களில் ஒன்று. பாயும் தமிழகம் நூலைப் படித்தவுடன் நினைவில் வந்தது. 1960 களில் கடும் தண்ணீர் பஞ்சத்தால் தவித்த திருச்செங்கோடு விவசாயிகள் ஆழ்துளை கிணறுகளை நீருக்காக தோண்டினர். மெதுவாக விவசாயத்தோடும். அதை விட்டும், ஆழ்துளை கிணறு தோண்டும் தொழிலில் இறங்கி இன்று தென்னிந்தியா முழுக்க அந்தத் தொழிலில் கொடிகட்டி பறக்கின்றனர். அது மட்டுமில்லாமல் அருகிலுள்ள நாமக்கல் பகுதியினர் இந்தத் தொழிலுக்கான உபகரணங்கள் தயாரிப்பதில் முன்னணியிலுள்ளனர். இம்மாதிரி தங்கள் முயற்சியால். உழைப்பால். அர்ப்பணிப்பால் தோன்றி வளர்ந்து இன்றைய தமிழகத்தின் இரத்தினங்களாக பல நிறுவனங்கள் உள்ளன. அம்மாதிரியான ஒவ்வொரு நிறுவனங்களைப் பற்றியும் தனியே ஒரு புத்தகமே எழுதலாம். சுசீலா ரவீந்திரநாத் ஒவ்வொரு நிறுவனத்தின் வரலாற்றைச் சுருக்கமாக எழுதியுள்ளார். முருகப்பா, டிவிஎஸ், அமல்கமேஷன் போன்ற குடும்ப நிறுவனங்கள், நாட்டின் சுதந்தரத்துக்கு முன் தொடங்கப்பட்ட நிறுவனங்கள், வாகன உற்பத்தி, விநியோக...

மெய்வருத்தம் பாரார்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. இந்த குறளுக்கு நமக்கு பொருள் தெரியும். துணிந்தபின் எண்ணுவேன் என்பது இழுக்கு, பின் வேறென்ன செய்ய வேண்டும்? திருக்குறள் மனிதன் அறத்தோடு வாழ வழி சொன்ன தொன்மையான நூல். தமிழில் திருக்குறளின் தொடர்ச்சியான நூலாக 17 ஆம் நூற்றாண்டில் குமரகுருபரரால் எழுதப்பட்ட நீதிநெறிவிளக்கம் கருதப்படுகிறது. அறத்தின் பாற்பட்ட வாழ்வின் அடிப்படைகளை விளக்குகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் எழுத வரும் ஒவ்வொருவரும் தன் முன்னோடிகளின் நூல்களை ஐயந்திரிபுற கற்றிருக்க வேண்டும். குமரகுருபரர் தன்னை தமிழின் நீண்ட இலக்கிய மரபின் தொடர்ச்சியாகவே நிலைநிறுத்துகிறார். கல்வியின் பயனும் சிறப்பும், கல்வியின்பம், கல்விச்செல்வம், புலவர் பெருமை, கற்றன மறவாமை, கல்வியழகே அழகு, பெரியோர் பணிவு, கற்றபடி நிற்றல், மேன்மக்கள் பெருமை, இறைமாட்சி, ஈகை, கருமமே கண்ணாயினார் போன்ற தலைப்புகளில் இன்னிசை வெண்பாக்களாக இயற்றியுள்ளார். ஏறக்குறைய திருக்குறளின் அதிகாரங்களையே நினைவுபடுத்தும். அதில் ஒரு வெண்பா மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார் எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி அ...

2018 இல் படித்த புத்தகங்கள்

2018 இல் படித்த புத்தகங்கள் 1. Better - Atul Gawande 2. என் பயணம் - அசோகமித்திரன் 3. Swami and Friends - RK Narayan 4. The Bachelor of Arts - RK Narayan 5. Waiting for the Mahatma - RK Narayan 6. The Man Eater of Malgudi - RK Narayan 7. The Dark Room - RK Narayan 8. A Tger for Malgudi - RK Narayan 9. The Guide - RK Narayan 10. பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் (5 தொகுதிகள்) - கங்கை அமரன் 11. மணிமேகலை (உரை வடிவில்) - என்.சொக்கன் 12. குற்றப் பரம்பரை - வேல.ராமமூர்த்தி 13. Ways of Seeing - John Berger 14. Steal Like An Artist - Austin Kleon 15. தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் - ஜெயமோகன் 16. வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம் - பாக்யராஜ் 17. Complications - Atul Gawande 18. வெஜ் பேலியோ - பா.ராகவன் 19. Being Mortal - Atul Gawande 20. கம்பாநதி - வண்ணநிலவன் 21. கிருஷ்ணப் பருந்து - ஆ.மாதவன் 22. புலி - என்.சொக்கன் 23. மெர்க்குரி பூக்கள் - பாலகுமாரன் 24. இரும்பு குதிரைகள் - பாலகுமாரன் 25. பந்தயப் புறா - பாலகுமாரன் 26. தாயுமானவன் - பாலகுமாரன் 27. அகல்யா - பாலகுமாரன் 28. கிருஷ்ணனின் ஆய...

The Idol Thief - புத்தகமும் சில நினைவுகளும்

காஞ்சிபுரம் அருகே உள்ள எங்கள் கிராமத்தின் ஓர் எல்லையில் கைலாசநாதர் கோயிலும் இன்னோர் எல்லையில் சஞ்சீவிராயர் கோயிலும் உள்ளன. சஞ்சீவிராயர் ஆலயத்தை விஜயநகர ஆட்சிகாலத்தில், 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில், லட்சுமி குமார தாத தேசிகர் எடுப்பித்தார். தாதசமுத்திரம் எனும் 130 ஏக்கர் அழகான ஏரியையும் வெட்டி(கட்டி)யுள்ளார். கைலாசநாதர் கோயிலைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகளேதும் இல்லை. இக்கோயில்களின் மூலவர்கள் மட்டுமே கோயிலினுள்ளே உள்ளனர். உற்சவமூர்த்திகள் ஊரின் நடுவே உள்ள அளவில் சிறிய சுப்ரமணியர் ஆலயத்திலும் செல்வ விநாயாகர் ஆலயத்திலும் உள்ளன. முதன் முதலாக இதன் காரணம் தெரிந்த போது அதிர்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது. 1960களில் சஞ்சீவிராயர் கோயிலின் உற்சவர் சஞ்சீவிராயரைத் திருடிச்சென்றுவிட்டனர். திருச்சியில் ஏதோ துணிக்கடையில் சேலைத் தொடர்பான உரையாடலில் சீலை என்ற சொல்லால் நிகழ்ந்த குழப்பத்தில் துணி வாங்க வந்தவர்கள் சிலைத் திருட்டைப் பற்றி உளறிவிட்டிருக்கின்றனர் (எங்கள் சஞ்சீவிராயர் அப்படி உளறவைத்தார் என்பது நம்பிக்கை). அன்றிரவு பிற உற்சவ மூர்த்திகளுடன் வெளிநாடு கடத்தப்பட இருந்த சிலைகள் மீட்கப்பட்டு...

டிடிகே குழுமம்

1920 களில் திருவல்லிக்கேணி மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் வழக்குரைஞராவது பெரிய குறிக்கோள். திருவல்லிக்கேணியின் ஆறுபேர்கள் என்ற குழு 1878இல் ஹிந்து ஆங்கில இதழைத் தொடங்கியது. அந்த ஆறு பேரில் ஒருத்தர் டிடி ரங்காச்சாரி எனும் வழக்குரைஞர். சென்னையின் புகழ்பெற்ற வழக்குரைஞர் மட்டுமில்லாமல் பின்னாளில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் ஆனார். அவரின் மகன் டிடி கிருஷ்ணமாச்சாரி 1928இல் டிடிகே குழுமத்தை நிறுவினார். சென்னையில் பெரும் ஆச்சரியத்தை அளித்த முடிவு அது. தந்தையைப் போல நீதித்துறையில் நுழைவார் என்ற எதிர்பார்ப்புகளை மீறி வணிகத்தில் இறங்கினார். இன்று Unilever என்றழைக்கப்படும் நிறுவனம் (இடையில் Hindustan Lever என்றும் அழைக்கப்பட்டது)அந்நாளில் Lever Brothers என்றழைக்கப்பட்டது. இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனத்தின் இந்திய விநியோகஸ்தராக இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. 1930 களில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ள வணிகத்தை தன் பதின்ம வயது மகனான டிடி நரசிம்மனிடம் ஒப்படைத்தார். பின்னாளில் சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சாராக பொறுப்பேற்று லைசன்ஸ் ராஜ் என்று கிண்டலிக்க...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...