Skip to main content

2020

2014 ஆம் ஆண்டில் கனடா மற்றும் அமெரிக்க நிறுவனப் பணிகளின் போது சில (5) மாதங்கள் வீட்டிலிருந்தே பணிபுரிந்தேன். அதற்குப் பிறகு இப்போதுதான். தொடர்ச்சியாக 11 மாதங்கள் வீட்டிலிருந்தே வேலை. 

அனைவருக்கும் கொரானா. எனக்கிருந்தது வேறு. 2019 டிசம்பரில் தொடங்கி மூன்று முறை அறுவை சிகிச்சை அறைக்கு சென்று வந்தாகிவிட்டது. சிகிச்சைக்காக குழந்தைகளை சிங்கப்பூரில் விட்டுவிட்டு இந்தியா வந்து திரும்பினோம். திரும்பின இரண்டாம் நாளே அனைத்து விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன. Close Shave. இந்தியாவில் அறுவைசிகிச்சை முடிந்து ஒரு நாள் ஓய்வெடுத்துத் திரும்பும் வகையிலென்றால் சிங்கப்பூரில் அதே சிகிச்சை காலை 10 மணிக்கு சென்று பிற்பகல் 2 மணிக்கு திரும்பும் வேகத்தில் நடந்தது. அன்று மாலையே வேலையைத் தொடரவும் செய்தேன். கடுமையான வேலை இருக்கும் போதெல்லாம் எழுத்தாளர் பா.ராகவனின் “கடுமையான வேலையைப் போன்ற வேறு தியானம் இல்லை” (நினைவிலிருந்து) என்ற வரி ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது. ஞாபகம் வரமால் இருக்க ஒரு வழி செய்யணும்.

ஆண்டு இறுதியில் நாங்களும் இந்த ஆண்டின் உருவாக்கமான Staycation இல் இருந்து விட்டு வந்தோம். குழந்தைகளை ஏறக்குறைய பூட்டி வைத்த குறை ஆண்டின் இறுதியில் தீர்ந்தது.

அதிகமான வேலையுடன் ஓரளவிற்கு படிக்கவும் செய்தேன்.  இம்முறை சில Graphic வகை நூல்களைப் படித்ததுடன் சில ஒலிப்புத்தகங்களை அமேசானிலும் Storytelலிலும் கேட்டேன். 

ஒலிப்புத்தகங்களை நல்ல குரலில் கவனம் பிசகாமல் கேட்க முடிகிறது. எனக்கு ரேவதி சங்கரனின் குரல் பிடிக்கும் (துப்பறியும் சாம்பு மற்றும் கிருஷ்ணா கிருஷ்ணா). கவிஞர் ரவிசுப்பிரமணியனின் குரலில் காதுகள் நாவலும் கேட்க நன்றாக இருந்தது. தலைகீழ் விகிதங்கள் (குரல் - ராஜா) , வேள்வித் தீ (குரல் - Jeyalakshmi Narayanan), கூளமாதரி (குரல் - Raaghav Ranganathan) மற்றும் வந்தார்கள் வென்றார்கள் (குரல் கே.சார்ல்ஸ்) கேட்க நன்றாகவே இருந்தன. 

இந்த ஆண்டு படித்த புத்தகங்கள். 

1. The Paper Menagerie and Other Stories - Ken Liu

2. சுதந்திரத்தின் நிறம் - Laura Coppa (தமிழில் B.R.மகாதேவன்)

3. தன்மீட்சி - ஜெயமோகன்

4. குள்ளச்சித்தன் சரித்திரம் - யுவன் சந்திரசேகர்

5. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

6. தேவமலர் -  Selma Lagerlöf (தமிழில் க.நா.சு)

7. க.நா.சு. நாவல்கள் - முதல் தொகுதி

8. கன்னியாகுமரி - ஜெயமோகன்

9. நானும் நானறிந்த ஜேகேவும் அமியும் - விமலாதித்த மாமல்லன்

10. க.நா.சு. நாவல்கள் - இரண்டாவது தொகுதி

11. க.நா.சு. நாவல்கள் - மூன்றாவது தொகுதி

12. விமரிசனக்கலை - க.நா.சு

13. நவீன தமிழிலக்கிய அறிமுகம் - ஜெயமோகன்

14. என்பிலதனை வெய்யில் காயும் - நாஞ்சில் நாடன்

15. மாமிசப் படைப்பு - நாஞ்சில் நாடன்

16. ராஜாமணி - எஸ்.வி.வி

17. விலங்குப்பண்ணை - George Orwell (தமிழில் க.நா.சு)

18. பாலை நிலப் பயணம் - செல்வேந்திரன்

19. இறவான் - பா.ராகவன்

20. ரப்பர் - ஜெயமோகன்

21. ஏழாம் உலகம் - ஜெயமோகன்

22. சாலப்பரிந்து - நாஞ்சில் நாடன்

23. In the Woods (Dublin Murder Squad, #1) - Tana French

24. வாசிப்பது எப்படி? - செல்வேந்திரன்

25. நகுமோ லேய் பயலே - செல்வேந்திரன்

26. My Husband & Other Animals - Janaki Lenin

27. Sometimes Brilliant - Larry Brilliant

28. அடி - தி.ஜா

29. ஒரு நடுப்பகல் மரணம் - சுஜாதா

30. Mauve - Simon Garfield

31. Coffee Can Investing - Saurabh Mukherjea

32. Anne Frank's Diary: The Graphic Novel - Ari Folman

33. The Handmaid's Tale: The Graphic Novel - Renee Nault

34. Animal Farm: The Graphic Novel - Odyr

35. Logicomix: An epic search for truth - Apostolos Doxiadis

36. The Unusual Billionaires - Saurabh Mukherjea

37. They Called Us Enemy - George Takei

38. Amazing Decisions - Dan Ariely

39. அள்ள அள்ளப் பணம் 1 - சோம.வள்ளியப்பன்

40. மாயப் பெரு நதி - ஹரன் பிரசன்னா

41. திருநெல்வேலி சரித்திரம் - Robert Cardwell (தமிழில் ந. சஞ்சீவி)

42. What the Finance - Sangeeta Shankaran Sumesh

43. Bulls, Bears and Other Beasts - Santosh Nair

44. சடங்கில் கரைந்த கலைகள் - அ.கா.பெருமாள்

45. ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் - அ.கா.பெருமாள்

46. சுண்ணாம்பு கேட்ட இசக்கி - அ.கா.பெருமாள்

47. தெய்வங்கள் முளைக்கும் நிலம் - அ.கா.பெருமாள்

48. தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன் (ஒலிப்புத்தகம்)

49. Let's Talk Money - Monika Halan (Audiobook)

50. கிருஷ்ணா கிருஷ்ணா - இந்திரா பார்த்தசாரதி (ஒலிப்புத்தகம்)

51. கவிமணி நினைவோடை - சுந்தர ராமசாமி

52. Weekend in the Woods - RB. Trary

53. இரும்பு குதிரைகள் - பாலகுமாரன் (ஒலிப்புத்தகம்)

54. வந்தார்கள் வென்றார்கள் - மதன் (ஒலிப்புத்தகம்)

55. தரையில் இறங்கும் விமானங்கள் (ஒலிப்புத்தகம்)

56. அடிமையின் காதல் - ரா.கி.ரங்கராஜன்

57. சாயாவனம் - சா.கந்தசாமி (ஒலிப்புத்தகம்)

58. I Will Judge You by Your Bookshelf - Grant Snider

59. கூளமாதரி - பெருமாள் முருகன் (ஒலிப்புத்தகம்)

60. புனலும் மணலும் - ஆ.மாதவன் (ஒலிப்புத்தகம்)

61. வேள்வித் தீ - எம்.வி.வெங்கட்ராம் (ஒலிப்புத்தகம்)

62. ஆகாயத்தாமரை - அசோகமித்ரன் (ஒலிப்புத்தகம்)

63. Tinker, Tailor, Soldier, Spy - John Le Carre

64. மாதொருபாகன் - பெருமாள் முருகன் (ஒலிப்புத்தகம்)

65. பறவைக்கு கூடுண்டு: அனைவருக்கும் வீடு லாரி பேக்கரின் கனவு - Elizabeth Baker (தமிழில் - மரு. வெ ஜீவானந்தம்)

66. காதுகள் - எம்.வி.வெங்கட்ராம் (ஒலிப்புத்தகம்)

இன்னும் சில இந்திரா சௌந்தரராஜன் மற்றும் ராஜேஷ்குமாரின் நாவல்களையும் ஒலிப்புத்தகத்தில் கேட்டேன். 

Comments

Popular posts from this blog

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...