ஐயங்கார்குளத்தில் ஒரு காலத்தில் பச்சியப்பா என்ற பெயர் கொண்ட ஆழ்குழாய் கிணறு தோண்டும் லாரியை அடிக்கடி காண முடியும். பட்டுச்சேலை நெசவுத்தொழிலின் வளமான காலங்களில் ஒன்று. பாயும் தமிழகம் நூலைப் படித்தவுடன் நினைவில் வந்தது.
1960 களில் கடும் தண்ணீர் பஞ்சத்தால் தவித்த திருச்செங்கோடு விவசாயிகள் ஆழ்துளை கிணறுகளை நீருக்காக தோண்டினர். மெதுவாக விவசாயத்தோடும். அதை விட்டும், ஆழ்துளை கிணறு தோண்டும் தொழிலில் இறங்கி இன்று தென்னிந்தியா முழுக்க அந்தத் தொழிலில் கொடிகட்டி பறக்கின்றனர். அது மட்டுமில்லாமல் அருகிலுள்ள நாமக்கல் பகுதியினர் இந்தத் தொழிலுக்கான உபகரணங்கள் தயாரிப்பதில் முன்னணியிலுள்ளனர்.
இம்மாதிரி தங்கள் முயற்சியால். உழைப்பால். அர்ப்பணிப்பால் தோன்றி வளர்ந்து இன்றைய தமிழகத்தின் இரத்தினங்களாக பல நிறுவனங்கள் உள்ளன. அம்மாதிரியான ஒவ்வொரு நிறுவனங்களைப் பற்றியும் தனியே ஒரு புத்தகமே எழுதலாம். சுசீலா ரவீந்திரநாத் ஒவ்வொரு நிறுவனத்தின் வரலாற்றைச் சுருக்கமாக எழுதியுள்ளார். முருகப்பா, டிவிஎஸ், அமல்கமேஷன் போன்ற குடும்ப நிறுவனங்கள், நாட்டின் சுதந்தரத்துக்கு முன் தொடங்கப்பட்ட நிறுவனங்கள், வாகன உற்பத்தி, விநியோகம், தகவல் தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் சேவைகள், மருத்துவ தொழில் நுட்பம், கோழிப்பண்ணைகள், கொங்கு மண்டல ஆடை உற்பத்தி, பால் பொருட்கள் உற்பத்தி, ஷாம்பு சாஷே புரட்சி, 1960 களில் ஆரம்பிக்கப்பட்டவை, பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு தொடங்கப்பட்ட நிறுவனங்கள் என அனைத்து தொழில்களைப் பற்றியும் எழுதியுள்ளார். தமிழ் நாட்டில் ஹூண்டாய் மற்றும் Ford நிறுவனங்கள் தொழிற்சாலை அமைத்த கதைகள் நம் மக்கள் மீது ஆட்சியாளர்களுக்கு இருந்த அக்கறையைக் காட்டுகின்றன.
டிசிஎஸ் நிறுவனம் தமிழ் கம்ப்யூட்டர் சர்வீசஸ் மற்றும் தமிழ் கோபால் சர்வீசஸ் என்று கிண்டலிக்கப்படும் அளவுக்கு சென்னையில் வேரூன்றியிருக்கிறது. அதன் முதலிரு ப்ராஜக்ட்களில் பணிபுரிந்தவர்கள் தலைமை நிர்வாக அதிகாரிகளாகவும் (தற்போதைய டாடா சன்ஸ் குழும சேர்மன் சந்திரசேகர்) வேறு நிறுவனங்களையும் நிறுவும் அளவுக்கும் (சிடிஎஸ் லட்சுமி நாராயணன்) முன்னேறியுள்ளனர். தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் டிசிஎஸ், சிடிஎஸ், போலாரிஸ், ஸோஹோ, Fresh desk, ராம்கோ சிஸ்டம்ஸ் என பல நிறுவனங்களின் கதைகள் உள்ளன.
சிவகாசியின் பதிப்பு தொழில், கோயம்புத்தூரின் வெட் கிரைண்டர் நிறுவனங்கள், விவசாய மோட்டார் மற்றும் பம்ப் தயாரிக்கும் நிறுவனங்கள், திருச்சியின் லயன் டேட்ஸ், சக்தி மசாலா என பல நிறுவனங்களின் அறிமுகமும் உள்ளது. MRF டயர் நிறுவனத்தைப் பற்றியும் நீண்ட அறிமுகம் உள்ளது. அப்பல்லோ மருத்துவமனைகளைப் பற்றியும் நல்ல அறிமுகம் உள்ளது.
சுதந்தரத்துக்குப் பிறகு நமக்கு வாய்த்த காமராஜருக்கும் ஆர்.வெங்கட்ராமனுக்கும் இதில் ஏராளமான பங்கு இருக்கிறது. வறட்சி மிகுந்த மாநிலமான நமக்கு தொழிற்சாலைகள் முக்கியமென கருதி செயல்பட்ட தலைவர்கள் அவர்கள். பின் வந்த ஆட்சியாளர்கள் ஓரளவிற்கு அதைத் தொடர்ந்தாலும் ஊழல்கள் தொழில் நிறுவனர்களை கவலையடைய வைத்திருக்கிறது.
நம் உண்மையான எதிர்காலம் இம்மாதிரியான துணிச்சலுடன் தொழில் தொடங்குபவர்களிடமே உள்ளது. இம்மாதிரியான நல்ல தமிழ் அபுனைவு புத்தகங்கள் எப்போதாவதுதான் படிக்கக் கிடைக்கின்றன.

Comments