இந்த ஆண்டு முழுக்க பயணம் இருந்து கொண்டே இருந்தது. ஆண்டின் பெரும்பகுதி பாங்காக் நகரத்தில் கழிந்தது. ஒரு முறை ஜகார்த்தாவிற்கு செல்ல வேண்டியிருந்தது.
நண்பர்களுடன் தமிழ்நாட்டின் அருவிகளுக்கு (முக்கியமாக மேற்கு மலைத்தொடர்ச்சியோரம்) ஒரு சாலை வழிப் பயணம் சென்றேன். சென்னையில் கிளம்பி திற்பரப்பு, காளிகேசம், களக்காடு தலையணை அருவி, அகத்தியர் அருவி, மணிமுத்தாறு, குற்றாலம், குண்டாறு அருவி, கும்பவுருட்டி, சின்னச்சுருளி மற்றும் கும்பக்கரை சென்று திரும்பினோம். கன்னியாகுமரி முழுக்க ஜெயமோகன் கதைகளில் இறங்கி திரிவது போல இருந்தது. ஆரல்வாய்மொழி கணவாய், திற்பரப்பு அருவியின் இரவு, ஆற்றங்கரையோர இசக்கி (யக்ஷி), ரப்பர் மரங்கள், மகாதேவர் ஆலயம், திருவட்டாறில் நாகப்பிரதிஷ்டை செய்த அரசமரம், கதகளி அரங்கம், கீரிப்பாறை, பழம்பொறி, ரசவடை என. நாங்கள் ஜூலை முதல் வாரத்தில் பயணித்தோம். திருநெல்வேலிக்கு வடக்கே ஒரு அருவியிலும் நீரில்லை. திற்பரப்பிலும், காளிகேசத்திலும், களக்காடு தலையணையிலும் ஊறிப்போய் வந்தோம்.
இந்த ஆண்டு விஷ்ணுபுர வாசக வட்டத்தின் ஊட்டி காவிய முகாமில் கலந்து கொண்டேன். மூன்று நாட்களும் உற்சாகமாக இருந்தது. தலையில் தட்டி உட்கார வைத்த மாதிரியும் இருந்தது. படிக்கும் ஆர்வம் அதிகரித்திருப்பதுடன் சில நல்ல நண்பர்களும் கிடைத்தனர். ஆண்டின் இறுதியில் விஷ்ணுபுர விருது விழாவில் கலந்து கொள்ளவிருந்த வேளையில் விழாவிற்கு முந்தைய தினம் செய்த மருத்துவ சோதனையில் ஓர் அதிர்ச்சி. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்தில், கோயம்புத்தூர் பயணத்தை ரத்து செய்ய வேண்டியதாயிற்று. எல்லாம் நல்ல படியாக முடிந்து ஆண்டின் இறுதியில் ஓய்வில் இருக்கிறேன்.
இந்த ஆண்டு கிண்டிலில் நிறைய புத்தகங்கள் படிக்க முடிந்தது. நிறைய பணிச்சுமையுடன் படிக்கவும் முடிந்தது. முதல் முறையாக ஒலிப்புத்தகம் கேட்கவும் ஆரம்பித்துள்ளேன். சில புத்தகங்களை ஒன்றுக்கு மேற்பட்ட முறை கேட்க வேண்டியதாயிருந்தது. இன்னும் நிறைய கேட்க வேண்டும். பாங்காக்கில் இரவு 11 மணிமுதல் 1 அல்லது 2 மணிவரை படிக்க நேரம் கிடைத்தது. Goodreads தளத்தில் கல்லூரி நண்பர்கள் ஒரு குழுமம் ஆரம்பித்தோம். மாதம் ஒரு புத்தகம் என ஜூன் மாதத்தில் இருந்து ஏழு புத்தகங்கள் படித்தோம். ஒரு மாதத்தில் மட்டும் அவர்கள் விருப்பப்பட்ட புத்தகங்களைப் படிக்கலாம் என்றோம். உற்சாகத்துடன் தொடர்வதுடன் நண்பர்கள் பிறரையும் அழைக்கும் எண்ணம் உள்ளது.
நான் இந்த ஆண்டு படித்த புத்தகங்களில் எனக்கு பிடித்தவை
1. யுகத்தின் முடிவில் - இராவதி கர்வே
2. அபிப்பிராய சிந்தாமணி - ஜெயமோகன்
3. Ready To Fire - Nambi Narayanan
4. பாரீசுக்குப் போ! - ஜெயகாந்தன்
5. இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகன்
6. புனைவு என்னும் புதிர் - விமலாதித்த மாமல்லன்
7. என் சரித்திரம் - உ.வே.சாமிநாதையர்
8. Rivers Remember - Krupa Ge
9. இந்திய ஞானம் - ஜெயமோகன்
10. Nine Rupees an Hour: Disappearing Livelihoods of Tamil Nadu - Aparna Karthikeyan
11. The Bhagavad Gita: A Biography - Richard Davis
12. Bad Blood - John Carreyrou
இந்த ஆண்டு படித்த புத்தகங்களின் பட்டியல்.
1. DR. VIKRAM AMBALAL SARABHAI - Agrawal, S.K.
2. யுகத்தின் முடிவில் - இராவதி கர்வே
3. அபிப்பிராய சிந்தாமணி - ஜெயமோகன்
4. உருவாகும் உள்ளம் - V.S. Ramachandran
5. The Glass Palace - Amitav Ghosh
6. Year of Magical Thinking - Joan Didion
7. The Power of Habit - Charles Duhigg
8. Ready To Fire - Nambi Narayanan
9. இயற்கையை அறிதல் - Ralph Waldo Emerson (தமிழில் - ஜெயமோகன்)
10. தாத்ரிகுட்டியின் ஸ்மார்த்த விசாரம் - ஆலங்கோடு லீலாகிருஷ்ணன் (தமிழில் - யூமா வாசுகி)
11. கற்றதும் பெற்றதும் 4 - சுஜாதா
12. தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி
13. கற்றதும் பெற்றதும் 3 - சுஜாதா
14. ஓரிரு எண்ணங்கள் - சுஜாதா
15. The Outsourcer - Dinesh Sharma
16. மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம் - சுஜாதா
17. பாரீசுக்குப் போ! - ஜெயகாந்தன்
18. அன்பு வழி - Pär Lagerkvist (தமிழில் - க.நா.சு)
19. புரிதலுக்கான சிறு வெளிச்சம் - விமலாதித்த மாமல்லன்
20. இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகன்
21. புனைவு என்னும் புதிர் - விமலாதித்த மாமல்லன்
22. என் சரித்திரம் - உ.வே.சாமிநாதையர்
23. Eleanor Oliphant Is Completely Fine - Gail Honeyman
24. திருப்புமுனை புதுமை நிறுவனங்களின் புரட்சிக் கதை - Porus Munshi (தமிழில் - ராமன் ராஜா)
25. நகலிசைக் கலைஞன் - ஜான் சுந்தர்
26. மார்த்தாண்ட வர்மா - சி.வி.ராமன் பிள்ளை (தமிழில் - பத்மநாபன் தம்பி)
27. Becoming Nigerian: A Guide - Elnathan John
28. நிலம் - பவா செல்லதுரை
29. தங்க முடிச்சு - சுஜாதா
30. Rivers Remember - Krupa Ge
31. அபூர்வ மனிதர்கள் - தி.ஜானகிராமன்
32. Crazy Rich Asians - Kevin Kwan
33. நிலம் பூத்து மலர்ந்த நாள் - மனோஜ் குரூர் (தமிழில் - கே.வி.ஜெயஸ்ரீ)
34. Tamarind City - Bishwanath Ghosh
35. ஆறாவடு - சயந்தன்
36. கற்பனைக்கும் அப்பால் - சுஜாதா
37. எழுத்துக் கலை - விமலாதித்த மாமல்லன்
38. இந்திய ஞானம் - ஜெயமோகன்
39. Consider Phlebas - Iain Banks
40. Bossypants - Tina Fey
41. நினைவு அலைகள் - தி.சே.சௌ.ராஜன்
42. ஜே ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
43. A study in the Scarlet - Arthur Conan Doyle
44. தலித்துகளும் நிலமும்: பஞ்சமி நிலம் கிடைத்த வரலாறு - ரவிக்குமார்
45. கெடைகாடு - ஏக்நாத்
46. The Sign of Four - Arthur Conan Doyle
47. ஆங்காரம் - ஏக்நாத்
48. வயல் காட்டு இசக்கி - அ.கா.பெருமாள்
49. 281 and Beyond - V.V.S. Laxman
50. மணற்கேணி - யுவன் சந்திரசேகர்
51. பாம்பின் கண் - தியடோர் பாஸ்கரன்
52. 143 குறுவரிக் களம் - பா.ராகவன்
53. Nine Rupees an Hour: Disappearing Livelihoods of Tamil Nadu - Aparna Karthikeyan
54. The Bhagavad Gita: A Biography - Richard Davis
55. கொம்பு முளைத்தவன் - பா.ராகவன்
56. லைட்டா பொறாமைப்படும் கலைஞன் - இசை
57. கானல் நதி - யுவன் சந்திரசேகர்
58. வைரமுத்துவின் திருட்டாற்றுப்படை - விமலாதித்த மாமல்லன்
59. Bad Blood - John Carreyrou
Goodreads தளத்தில் நான் படித்த புத்தகங்களின் தகவல்கள் - https://www.goodreads.com/user/year_in_books/2019/15184294
Comments