1920 களில் திருவல்லிக்கேணி மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் வழக்குரைஞராவது பெரிய குறிக்கோள். திருவல்லிக்கேணியின் ஆறுபேர்கள் என்ற குழு 1878இல் ஹிந்து ஆங்கில இதழைத் தொடங்கியது. அந்த ஆறு பேரில் ஒருத்தர் டிடி ரங்காச்சாரி எனும் வழக்குரைஞர். சென்னையின் புகழ்பெற்ற வழக்குரைஞர் மட்டுமில்லாமல் பின்னாளில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் ஆனார்.
அவரின் மகன் டிடி கிருஷ்ணமாச்சாரி 1928இல் டிடிகே குழுமத்தை நிறுவினார். சென்னையில் பெரும் ஆச்சரியத்தை அளித்த முடிவு அது. தந்தையைப் போல நீதித்துறையில் நுழைவார் என்ற எதிர்பார்ப்புகளை மீறி வணிகத்தில் இறங்கினார். இன்று Unilever என்றழைக்கப்படும் நிறுவனம் (இடையில் Hindustan Lever என்றும் அழைக்கப்பட்டது)அந்நாளில் Lever Brothers என்றழைக்கப்பட்டது. இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனத்தின் இந்திய விநியோகஸ்தராக இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1930 களில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ள வணிகத்தை தன் பதின்ம வயது மகனான டிடி நரசிம்மனிடம் ஒப்படைத்தார். பின்னாளில் சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சாராக பொறுப்பேற்று லைசன்ஸ் ராஜ் என்று கிண்டலிக்கப்படும் அரசாங்கத்தின் கடுமையான தொழில்துறை கட்டுப்பாட்டைக் கொண்டு வந்து தான் ஆரம்பித்த நிறுவனத்துக்கும் பெரும் நட்டம் உண்டாக்கினார். டிடி நரசிம்மன் வெறுமனே விநியோகத்தோடு மட்டுமில்லாமல் சென்னையிலேயே பொருட்களை தயாரித்து விநியோகித்தார். இந்திராகாந்தி காலத்தில் மேலும் கடுமையான தொழில் கட்டுப்பாடுகளால் நிறைய நிறுவனங்கள் மூடப்பட்டன. டிடி நரசிம்மன் 1970 களில் தன் இரண்டாவது மகன் டிடி ஜகன்னாதனிடம் பெரும் கடன் சுமையோடு நிறுவனத்தை ஒப்படைத்தார். இந்த கடன்களை அவர்கள் இருபதாம் நூற்றாண்டில் இறுதியில் தான் அடைத்தனர்.
கடந்த மே மாதம் டிடி குழுமத்தின் நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து டிடி ஜகன்னாதன் ஓய்வு பெற்றார். டிடி குமுமத்தின் தோற்றம், வளர்ச்சி, தோல்வி மற்றும் கடைசியாக இந்தியாவின் மதிப்பு மிக்க தொழில் குழுமமாக மா(ற்)றியதைப் பற்றி அவர் எழுதியிருக்கும் (ஒரு பத்திரிக்கையாளரோடு சேர்ந்து) புத்தகம் - Disrupt and Conquer - How TTK Prestige Became a Billion Dollar Company.
இந்தியாவிற்கு லைஃப்பாய் சோப், வுட்வாட்ஸ் க்ரேப் வாட்டர் (குழுந்தை அழுகிறாதா, வுட்வாட்ஸ் கொடுக்கச் சொல்லு புகழ்), பான்ஸ் பவுடர், அட்லஸ் மற்றும் பெரும்பாலான இந்திய குடும்பங்களின் சமையலறையிலும் இருக்கும் Prestige குக்கர் என புகழ்பெற்ற பொருட்களை தயாரித்தும் விநியோகித்தும் பெரும் பேர் பெற்ற குழுமம். ஆனால் இவர்களின் வைரம் TTK Prestige என்ற நிறுவனம் தான். இவர்கள் எளிய குக்கரில் ஆரம்பித்து இன்றைக்கு ஏறக்குறைய 400 வகையான குக்கர்களை வடிவமைத்து விற்பனை செய்திருக்கின்றனர். Gasket Release System த்தைக் கண்டுபிடித்தவரே டிடி ஜகன்னாதன் தான். IIT சென்னையில் இயந்திரவியல் பொறியியல் பட்டமும் அமெரிக்காவின் புகழ்பெற்ற Cornell பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். TTK Prestige நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 8000 கோடி ரூபாய்க்கும் மேல்.
தன் வெற்றிக்கான (பிறரின் வெற்றிக்காகவும்) காரணங்களாக டிடி ஜகன்னாதன் இந்த நூலில் மூன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறார்.
1. நாள்தோறும் தவறாமல் அலுவலகத்துக்கு செல்லுங்கள்
2. உயர்நிலை (high level) விஷங்களைப் பின்னுக்குத்தள்ளி விரிவான விவரங்களில் கவனம் செலுத்துங்கள். அப்படி செய்தால் உயர்நிலை விஷயங்கள் தானே நன்றாக நடக்கும்.
3. ஏட்டுக் கல்வியோடு அதைச் சரியாக பயன்படுத்தும் புத்தியும் (Common Sense) அவசியம்.
ஒரு விறுவிறுப்பான நாவலுக்கு இணையான சுவாரசியமான நூல். நிச்சயம் வாங்கிப் படிக்கவும்.
https://www.amazon.in/Disrupt-Conquer-Prestige-Billion-Dollar-Company/dp/0670090174

Comments