நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல திரைப்படம் பார்த்த உணர்வு. தொய்வில்லாமல் ஒரு நல்ல திரைக்கதை. எழுத்தாளர்கள் திரையில் பளிச்சென்று தெரிய ஆரம்பித்துவிட்டனர். சுஜாதாவின் தாக்கமும் தெரிகிறது! தியேட்டர்களில் அடிக்கடி கைத்தட்டல்களும் சிரிப்புகளும். லட்சுமியும் லாலேட்டனும் பேசும் வசனங்களும் அவர்களின் உடல்மொழியும் கச்சிதமாக படமாக்கப்பட்டிருக்கிறது.
மோகன்லாலின் screen presence மிக நன்றாக இருக்கிறது. கமல் கொஞ்சம் subdued ஆக நடித்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். ஆனால் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். இருவரும் இறுதியில் சந்திக்கும் காட்சியில் மோகன்லாலே முன்னால் தெரிகிறார். ஒரு சாமானியனின் உடல்மொழிக்கு கமலஹாசனின் உடல்வாகும், நடையும் பொருந்தவில்லையோ என்று தோன்றுகிறது.
நல்லவேளை திரைப்படத்தில் பாடல்கள் இல்லை. படமும் 2 மணி நேரங்களில் முடிந்துவிட்டது. அல்லா ஜானே மட்டும் திரையில் பின்னணியில் கேட்க கிடைத்தது. மனுஷ்யபுத்திரனுடன் பேசியபோது தான் அந்த ஒரு பாடலை மட்டுமே எழுதியதாகவும் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய பாடல் கமலே எழுதியது என்றும் கூறினார். அவர் கவிதைகளைப் போலவே அல்லா ஜானே பாடலும் ஒரு நம்பிக்கை இழந்த ஜீவனின் குரலாகவே ஒலிக்கிறது.
இரா.முருகனின் இத்திரைப்படம் சார்ந்த பல கட்டுரைகளை படித்து இருந்ததால் கொஞ்சம் நிறையவே எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்புகள் இல்லாமல் செல்ல இயலவில்லை. என் நண்பன் நீ நல்ல திரைப்படம் என்று சொல்லும்போதுதான் சந்தேகமாக இருக்கிறது என்று உள்ளே போகும்போதே சொன்னான். வெளியில் வரும் போது கமல் தசாவதாரம் மாதிரி படங்களை எடுப்பதைக் காட்டிலும் இம்மாதிரி படங்களை எடுக்கலாம் என்று சொன்னான்.

Comments