சிங்கை தேசிய நூலகத்திலிருந்து குறுஞ்சாமிகளின் கதைகள் புத்தகத்தைப் பார்த்தவுடன் வாசிக்கக் கொண்டுவந்தேன். கழனியூரன் தொகுத்து உயிர்மை வெளீயிட்டு இருக்கும் இந்த நூலில் தென் தமிழகத்தின் பல குறுஞ்சாமிகளின் செவிவழி வரலாற்றைத் தொகுத்துள்ளார்.
"காதல் தோல்வி, தியாக வரலாறு, கலப்பு மணம் என்பன போன்ற உண்ர்ச்சிக் கொ ந்தளிப்பான கதையாடல்கள், இக்குறுஞ்சாமிகளின் பின்னணியில் உள்ளன" என்று தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அவர் தொகுத்துள்ள 23 கதைகளும் இதையே வெளிப்படுத்துகின்றன.
புத்தகத்தின் முடிவில் கழனியூரன் ஒரு முக்கியமானக் கோரிக்கையை முன்வைக்கிறார்.
"பாரததேசம் எங்கும் நிலவும் இத்தகைய நாட்டுப்புற தெய்வங்களின் வரலாறுகள் தொகுக்கப் பட வேண்டும்"
இதை யாரேனும் முன்னெடுத்துச் செல்வார்களா என்று தெரியவில்லை.
தமிழ் நாட்டின் நிறைய கிராமங்களில் சிறு தெய்வ வழிபாடு நடைமுறையில் இருந்தாலும் அவற்றின் வரலாறு அறிய முடியாததாகவோ இல்லை சானறுகள் இல்லாததாகவோ இருக்கிறது. மேலும் மாரியம்மன் என்ற வழிபாட்டு சிறுதெய்வம் ஏறக்குறைய எல்லா ஊர்களிலும் இருக்கிறது. ஆனால் அவற்றின் வரலாறுகள் பெரும்பாலும் வெவ்வேறாகவே இருக்கின்றன.
இந்த புத்தகத்தை வாசிக்கையில் எழுத்தாளர் மணா அவர்கள் தொகுத்திருந்த "தமிழ் மண்ணின் சாமிகள்" என்ற புத்தகம் நினைவுக்கு வந்தது. அவரும் தமிழ் நாட்டு சிறு தெய்வ வழிபாடுகளைப் பற்றிய (செவிவழி) வரலாற்று செய்திகளைத் தொகுத்தளித்திருந்தார்.
அப்போதே எங்கள் கிராமத்தில் இருக்கும் சில சிறுதெய்வ வழிபாடுகளைப் பற்றி எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன். தற்போது அதைப் பற்றி சிறிது எழுதலாமென்று தோன்றுகிறது. கழனியூரன் சிறு தெய்வங்கள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் இருந்து பிற்காலத்தில் செங்கற்களாலும் பின் காரைகளாலும் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன என்கிறார்.
எங்கள் கிராமத்தில் உள்ள சிறு தெய்வ கோயில்களில் படவேட்டம்மன் கோயிலில் அம்மன் மட்டும் நனையாமல் இருப்பதற்கான் சிறு ஏற்பாடு உள்ளது. அதைத் தவிர சுற்றுச் சுவர் மட்டுமே உள்ளது. இது அவர் குறிப்பிடுவது போல ஊரின் விளிம்புநிலை மக்களால் வணங்கப்படும் தெய்வம். இது அவ்வகையில் ஒரு இனக்குழுவைச் சார்ந்த ஜாதிய சிறு தெய்வமாகவே உள்ளது.
கன்னியம்மன் என்ற சிறுதெய்வத்திற்கு கூரையும் கிடையாது சுற்றுச் சுவரும் கிடையாது. இத்தெயவத்திற்கு வழிபாடும் ஏதும் நடப்பதில்லை. 130 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் குளத்தின் ஒரு மூலையில் புதர்கள் மண்டிக் கிடக்கும் இடத்தில் அமைந்துள்ள அம்மன் மிகவும் அச்சமூட்டும் தெய்வமாகவே சித்தரிக்கப்பட்டு வருகிறது.
பொன்னியம்மன் மற்றும் கங்கையம்மன் போன்ற சிறு தெய்வங்களுக்கு கூரை அமைக்கப்பட்டுள்ளதுடன் ஆண்டுதோறும் திருவிழாவும் நடைபெற்று வருகிறது. இதில் பொன்னியம்மன் ஊரின் வளம் சார்ந்த சிறு தெய்வமாகக் கருதப்பட்டு வருகிறது. மழை வேண்டி இந்த அம்மனுக்கு கொடைகள்(திருவிழா) எடுக்கப்பட்டுள்ளன. நாக்கில் சூலம் குத்துதல், உடம்பில் எலுமிச்சைப் பழங்களைக் குத்துதல், முதுகுச் சதைகளைக் கொக்கிகளால் துளைத்து மறுமுனையைக் கயிற்றில் கட்டி பறந்து சென்று அம்மனுக்கு மாலை அணிவித்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் திருவிழாவின் போது நிறைவேற்றப் படுகின்றன. ஆனால் இச்சிறுதெய்வங்களின் வரலாறு பற்றி எவரேனும் சிந்தித்திருப்பாரா என்று தெரியவில்லை.
இதை விட குடும்ப குலதெய்வ வழிபாடும் வரலாற்றைப் பற்றித் தெரியாததாகவே உள்ளது. எங்கள் குடும்பத்தின் குலதெய்வம் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் இருந்து மானாம்பதி எனும் சிற்றூர் வழியே 2 கிமீ மண் பாதையில் சென்றால் வரும். தெய்வத்தின் பெயர் பச்சையம்மாள். அக்கிராமத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் அம்மன் சுமார் 35 கிமீ தள்ளி இருக்கும் ஒரு குடும்பத்திற்கு குல தெய்வமாக இருக்கும் கதை கண்டிப்பாக சுவாரசியமான ஒன்றாக இருக்கும். ஆனால் அதைப் பற்றி எவருக்கேனும் ஒரு சிறு விவரம் கூடத் தெரியாமலிருப்பது வியப்புக்குரிய ஒன்றாக இல்லை.
இக்காலத்தில் அவற்றைக் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டியிருப்பினும் அதற்கான சாத்தியம் கேள்விக்குறியே. கண்டிப்பாக கழனியூரனின் இத்தொகுப்பு சமகால மானுடவியல், நாட்டாரியல் மற்றும் பண்பாட்டியியல் சார்ந்த முக்கியமான ஆவணமாகத் திகழும்.

Comments
வாங்க வாங்க.