Skip to main content

காரைக்குடியிலிருந்து காஞ்சிபுரம் வரை...

பயணங்களின் அழகியலை நல்ல அனுபவமாகவும் ரசிக்கக் கற்றுக் கொண்டது இந்த காரைக்குடியிலிருந்து மாலை நேரத்தில் தொடங்கி மறுநாள்‍ காலையில் காஞ்சிபுரம் ஐயங்கார்குளத்தில் (பூர்வீகம்) முடிவடையும் ஓர் அற்புதமான பயணத்தில் தான். 2001 இல் கருணாநிதியைக் கைது செய்த அதே தினம் பேருந்துகள் கிடைக்காததால் செங்கல்பட்டில் இருந்து காரைக்குடியை நோக்கிய எனது பயணம் முன் கண்ணாடி உடைக்கப் பட்ட அரசு விரைவுப் பேருந்தின் வழியே இனிதே தொடங்கியது. திருச்சியில் இறங்கும் போது எங்க ஊர் பொன்னியம்மன் திருவிழாவில் சாயங்களைப் பூசி தெருவில் கூத்தாடி செல்பவர் போல கரிப் பூசி இறங்கினேன். காரைக்குடி அழகப்பர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த இரண்டு வாரங்கள் என் அந்தரங்க எண்ணஙகளை எனக்குள்ளாகவே பேசிக்கொண்டிருக்க வேண்டிய ஒரு நிலையில் மட்டுமே இருந்தேன். என் ஊர்க்காரன் தணிகா நீ homesick ன்னு கேட்டபோது நான் முழித்த முழி நான் எப்படி 18 வருஷம் ஒரெ வீட்டில் இருந்துட்டு இப்படி ஒரு இடத்துல வந்து இருக்கேன்னு அவனுக்கு புரிஞ்சுடுச்சி.இந்த வாரம் எல்லாரும் ஊருக்கு போலாம்னு இருக்கோம் நீயும் வான்னு சொல்லிட்டுப் போனான்.

எப்போதுமே அதிக அனுப‌வங்களைத் தந்தது காஞ்சிக்கு செங்கல்பட்டு வழியே திரும்பி வரும் பயணம் தான். நான் இதை என் முதல் பயணத்துலயே உணர்ந்தேன். அதுவும் ரம்மியமான இளங்காலையில் செங்கல்பட்டு நெடுஞ்சாலை நிறுத்தத்தில் இறங்கி ஒரு 212B பேருந்தில் ஏறி ஒரு பக்கம் ஆற்று மணலாலும் மறுபக்கம் நெற்பயிர்களாலும் நிரம்பி இருக்கும் வழிகளினூடேச் செல்லும் வாய்ப்பு வேறு எங்கும் நான் காணமுடியாதது. அதுவும் அந்த நெல் வயல்களினூடே வளைந்து வளைந்து செல்லும் தண்டவாளங்களின் மேல் செல்லும் ஒரு ரயிலைக் காண்பது அந்த அழகியலின் சிகரமாகவே எனக்கு மாறிப் போனது.

நான் காரைக்குடி ரயில் நிலையத்தை விட்டுட்டு இவ்வளவு தூரம் சீக்கிரம் வந்து இருக்கக் கூடாது.மாலை 5.50க்கு திருச்சிக்கு கிளம்பும் ஒரு ரயிலில் தான் என் இந்த பயணம் தொடங்கியது. நாங்கள் அழகப்பா பல்கலையில் இறங்கி ரயில் நிலையத்துக்கு நடந்து ஓடியதைச் சொல்லியே ஆக வேண்டும். ஒரு வழியாக டிக்கெட்டை வாங்கி ரயிலில் ஏறியாச்சு. நான், பிரபு, மைக்கேல், தணிகா, சுவாமி, ராஜா மற்றும் யுவனேஷ் என்று ஒரு பெரிய கூட்டம். ரயில் மெதுவாக் கிளம்பி வேகம் பிடிக்க ஆரம்பிக்கும் போதே கோட்டையூர் நிறுத்தம் வந்துடும்.அப்படியே செட்டிநாடு, திருமயம், புதுக்கோட்டை, கீரனூர் எல்லாம் கடந்து திருச்சி ஜங்ஷன் வந்து சேர இரவு 9 மணி ஆயிடுச்சி.திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்துக்கு வெளியே தொடர்ச்சியா இருந்த ஹோட்டல்ல நாங்க ஒரு 3 பேர் சரவண பவன் (சென்னை சரவண பவன் இல்ல) போனோம். பாதி பேர் பக்கத்துல இருந்த செட்டி நாடு அசைவ உணவகத்துக்குப் போயிட்டாங்க. பிரபு திருச்சிதான், அதனால அவன் கிளம்பிட்டான். நானும் தணிகாவும் செங்கல்பட்டுல இறங்கனும் மீதி பேர் சென்னைப் பசங்க.

இப்பதான் முக்கியமான சம்பவம், அதாவது ஒரு நல்ல தனியார் பேருந்தில் சீட்டுகளைக் குறைந்தக் கட்டணத்தில் பிடிக்கனும். ஆனா இது எல்லா சமயத்திலயும் நடக்காது. விடுமுறை காலங்களில் விழுப்புரம் பைபாஸ் ரைடர்ல தான் போக வேண்டியது இருக்கும்.அதுக்கு சீட் பிடிக்கிறது எல்லாம் பெரிய சாகசமாத்தான் இருக்கும். ஆனா அன்னைக்கு எங்களுக்கு ஒரு நல்ல தனியார் பேருந்து கிடைச்சுது. அன்னைக்கு தான் எனக்கு பேருந்தில் படம் பார்க்கும் ஒர் அரிய வாய்ப்பு கிடைச்சுது. ஆனா எனக்கு அன்னைக்குதான் பேருந்துல போடற படத்தோட அருமை பெருமை எல்லாம் தெரியவந்தது. அன்னைக்கு ஓட்டின படம் "கிருஷ்ணா கிருஷ்ணா" அப்படின்னு விசுவும் எஸ்.வி.சேகரும் நடிச்ச(கடிச்ச‌?) படம். த‌னியார் பேருந்து எல்லாம் எத்த‌னை ம‌ணிக்கு சொல்லிட்டு எத்த‌னை ம‌ணிக்கு எடுப்பாங்கிற‌து ஒரு தனிக் கட்டுரை எழுத வேண்டிய செயல். திருச்சி பேருந்து நிலைய‌ ப‌குதியைச் சுத்திச்சுத்தி வ‌ருவாங்க‌.இப்ப‌டியே 11 இல்ல‌ 12 ஆகிடும்.ஆனா ச‌ம‌ய‌புர‌ம் தாண்டின‌ உட‌னே அவ‌ங்க‌ எடுக்கிற‌ வேக‌த்துல‌ நிறைய‌ நாள் ப‌ய‌ம் குப்புன்னு வ‌ரும்.அவ‌ங்க அந்த‌ NH45 ல‌ போடுற‌ ஒவ்வொரு brake க்கும் தூக்கமெல்லாம் ப‌ற‌ந்துடும்.

அந்த‌ ரோட்டுலதான் எத்த‌னை விப‌த்து, எவ்வ‌ளவு traffic Jam. அதுவும் உளுந்தூர் பேட்டைக்கு முன்னாடி இருக்கிற‌ ஒரு railway crossing ல‌ எத்த‌னை முறை மாட்டி ம‌ணிக்க‌ண‌க்கில‌ பாதி தூக்க‌த்துல‌ முழிச்சு முழிச்சுப் பார்த்து ம‌றுப‌டியும் கொஞ்ச‌ம் ஸீட்ல‌ இற‌ங்கி வளைஞ்சித் தூங்கி இருப்போம்.ஒரு வழியா திண்டிவ‌ன‌ம், மேல்ம‌ருவ‌த்தூர் எல்லாம் தாண்டி ம‌துராந்த‌க‌ம் வந்த‌ உட‌னே செங்க‌ல்ப‌ட்டு வாச‌னை வ‌ந்துடும். பாலாறு பால‌ம் வந்த‌ உட‌னே சுத்த‌மா தூக்க‌மெல்ல‌ம் போயிடும்.செங்க‌ல்ப‌ட்டு பைபாஸ் ல‌ இற‌ங்கி குறைஞ்ச‌து இர‌ண்டு மாட்டு வண்டியாவ‌து பாக்காம‌ இருக்க‌ முடியாது. முத‌ல் நாள் கல்பாக்கத்துல இருந்து திருப்ப‌தி போற‌ ஒரு ஆந்திரா அர‌சு பேருந்துல‌ தான் நானும் த‌ணிகாவும் காஞ்சிபுர‌ம் போனோம். நான் சிவகாமியின் சபதம் படிக்கிற வரையிலும் இந்த பாதை பல்லவர்களின் இராஜபாட்டையாக இருந்திருக்குமென எண்ணியதில்லை.ஆனால் படித்தப் பின்பு நானே முடிவு செய்து கொண்ட இராஜபாட்டை இது. ஆயனர் வீடும் இந்த பாதையில் தான் எங்கோ ஒர் இடத்தில் இருந்திருக்குமென எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

காஞ்சிபுரம் மூங்கில் மண்டபத்தில் தணிகாவும், பேருந்து நிலையத்தில் பாரதியும் விடைபெற்றபின், ராந்தம் செல்லும் ஒரு நகரப் பேருந்தில் மறுபடியும் என் பயணம் ஐயங்கார்குளம் வரை செல்லும். இங்கும் பாலாற்றை நான் கடக்க வேண்டும். காலை நேர ஆற்றங்கரையின் ஓர் அற்புதமான மணத்தை என்னால் இங்கு உணர முடிந்து இருக்கிறது. தற்போது வெறும் மணல் குவாரியாக மாறி இருக்கும் இவ்விடம் தினம் தினம் தன் உயிரையும் உடலையும் இழந்து ஒரு பாலைவனமாகவே தோற்றமளிக்கிறது. தினம் தினம் ஒரு 1000 முதல் 2000 லாரிகளின் வயிற்றை தன் சதையாகிய மணலால் குருதியான நீர் வற்றி நிரப்பிக் கொண்டு இருக்கிறது.

எத்தனை பயணங்கள் என்று என்னால் ஒரு எண்ணைச் சொல்ல முடியவில்லையெனினும், ஒவ்வொரு பயணமும் ஓர் அற்புத நிகழ்வாக நினைவிலிருக்கிறது. காலையில் தொடங்கிய அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்ததிற்காக ஒரு முறை செஙகல்பட்டில் இருந்து டெம்போவில் அதிகாலை 4 மணிக்கு அருகில் இருப்பவரின் முகம் கூடத் தெரியாத பயணம். மார்கழிக் குளிரில் நடுங்கியபடியே 212B யில் நான், தணிகா மற்றும் பாரதி மூவரும் ஒடுங்கிய படியே காஞ்சிபுரம் வந்து சேர்ந்தது. ஒருமுறை திருச்சியில் விழுப்புரம் பைபாஸ் ரைடரில் இரவு 1 மணிக்கு இடம் பிடித்து காலை 9 மணிக்கு செங்கல்பட்டு வந்து இறங்கியது என என் பயண அனுபவங்கள் இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது.

ஆனால் இந்த பயண அனுபவங்கள் நான் 3 ஆண்டுகள் பெங்களூரில் இருந்த போதும் 6 மாத ஹைதராபாத் வசித்தலின் போதும் கிடைக்கவில்லை. என்னுடைய‌ பட்டம் பெறும் விழாவின் போது பெங்களுரிலிருந்து காரைக்குடிக்கு சென்று திரும்பி தனியே செங்க‌ல்பட்டு வழியே காஞ்சிபுரம் சென்றென். என்னால் எந்த பெரிய மாற்றத்தையும் காண முடியவில்லை. செங்கல்பட்டு பைபாசில் ஒரு பெரிய பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. மாட்டு வண்டிகள் எந்த தொந்தரவுமின்றி பைபாசைக் கடக்க முடிந்தது.

Comments

பயணங்கள் முடிவதில்லை.

நல்லா எழுதி இருக்கீங்க.

வாழ்த்து(க்)கள்.
சலம் said…
வாங்க. உங்க பின்னூட்டத்திற்கு நன்றி.
Tamil fonts kaivasam illa.
mechuvadharkku mozhi oru thadai illai ena karuthi!! Keep up!
Naaloru maeni pozhuthoru vannamaa unga ezhuthu nadaiyum adhil milirum malarum nenaivuhalum arumai!!
சலம் said…
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி Princess.
GPK said…
Chalam, jus now had a chance to read this blog...amazing...keep it up!!!
Unknown said…
dae cjallam.. nice blog da.. :-)
Unknown said…
Dae challam.. nice blog da :-)
Unknown said…
Hi Chalam... Unakulla ippadi oru ezhuthalana????? Good narration.

Popular posts from this blog

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...