Skip to main content

கா(ப்)பியும் காஞ்சிபுரமும்

எங்க‌ வீட்டில‌ எல்லாம் ஒரு நாளைக்கு சாதரணமா அஞ்சு த‌ட‌வ‌ எல்லாம் காப்பிக் குடிக்க‌லாம்.அதுவும் மாசி மக‌ம், ந‌ட‌வா திருவிழான்னா கேட்க‌வே வாணாம்.ஊர்ல‌ இருந்து சொந்த‌ கார‌ங்க‌ batch batch ஆ தான் வ‌ருவாங்க‌. எங்க‌ம்மா ஒவ்வொரு முறையும் அடுப்ப‌ங்க‌ரைக்கு போய் காப்பிய‌ப் போட‌ ஆர‌ம்புச்சுடுவாங்க‌.நாம‌ அப்ப‌டியே வ‌ந்துருக்கிற‌வ‌ங்களுக்கு கொடுக்கும் போது கூட‌ ஒன்னு வாங்கிக்கலாம். நாக்கு எந்நேரமும் தெகட்டிட்டே இருந்தாலும் அத பத்தியெல்லாம் நாங்க கவலைப்படறுதுல்ல.சில சமயம் ஏன் இந்த கச்சபேஸ்வரரும் கரி வரதரும் வருஷத்துக்கு ஒரு முறை மட்டும் வராங்கன்னு தோணும்.

இதுல‌ என்ன‌ பெரிய‌ விஷ‌ய‌ம்னா ஊர்ல‌ இருக்கிற‌ எல்லாருக்கும் ஒரு 90% சொந்தக்காரங்க காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், ஐயம்பேட்டை(காஞ்சிபுரம் பக்கத்திலயும் ஒன்னு இருக்குது) தான்.இப்ப தக்கோலம் (பொன்னியின் செல்வன்ல வர இராஜாதித்தர் போர் புரிந்த இடம் தாங்கோ) பக்கமும் பொன்னு கொடுத்து பொன்னு எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.மெட்ராஸ்ல எல்லாம் சொந்தகாரங்க தெருக்கு ஒன்னு கூட தேறாது. இவங்க எல்லார் வீட்லயும் காப்பி கதை இத விடப் பெரிய கதை. எங்க அண்ணன் எங்க அம்மாட்ட காப்பி கேட்டுக்கேட்டே குடிப்பார்.எங்களுக்கு சோறு இருக்குதோ இல்லையோ காப்பி கண்டிப்பா இருக்கணும்.

இந்த காப்பி எல்லாம் BRU காப்பி கெடயாது.காஞ்சிபுரம் மூங்கில் மண்டபத்துல இருக்கிற வசந்தா காபி கடையில இருந்து வாங்கி வரதுதான்.இதுவும் ஒரு மாதிரி நரசுஸ் தான். எப்பப்ப எல்லாம் பட்டு சேலை அறுக்கிறாங்களோ அப்ப எல்லாம் ஒரு 100 கிராமோ 200 கிராமோ அங்க இருந்து வாங்கின்னு வந்துடுவாங்க.பட்டு சேலை அறுக்கிறதுன்னா தறியில இருந்து முழுசா நெஞ்சி முடிஞ்ச பிறகு பிரிச்சு எடுக்கிறதுதான்.அப்படி எடுத்த சேலைய மடிக்கிறது ஒரு பெரிய கலை.விஜய் டிவில இருந்து ஜில்லுன்னு ஒரு சேலஞ்ல சேலை மடிக்கிறத ஒரு போட்டியா வச்சி எங்க ஊருக்கு வந்து சேலைய நாசம் பண்ணிட்டு போனாங்க கொஞ்ச நாளைக்கு முன்னாடி.காப்பிக் குடிக்க வச்சிருக்கிற டம்ளர் எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கும். எங்க வீட்டுல அண்டா டம்ளர்ன்னே ஒன்னு இருக்குனா பார்த்துக்குங்க.

பில்டர் எல்லாம் அடிக்கடி எடுக்க மாட்டாங்க. அது நம்ம GOAL கதையில‌ வர bottleneck மாதிரி. நாம குடிக்கிற அளவுக்கு தேவையான டிகாஷன் அவ்ளோ சீக்கிரமா பில்டரால தர முடியாது.அதுக்கெல்லாம் எங்க வீட்ல அசர மாட்டாங்க.தோராயமா சூப்பரா பில்டர் பண்ணுவாங்க. என்ன கடைசியில டம்ளர்ல அடியில கொஞ்சம் கசடு இருக்கும். அதப்பத்தியெல்லாம் நாங்க கவல படறதில்லன்னு நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியனும்னு இல்ல.ஆனா ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி மைக்ரைன் (migraine) அப்படின்னு ஒரு நண்பர் வந்தார்.இனிமேல் காப்பி எல்லாம் குடிக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார்.அதனால இந்த விஷயங்களெல்லாம் அனுப‌வங்களா மட்டும்தான் இருக்கு.அதுமட்டுமில்லாம இப்ப எல்லாம் எங்க வீட்டுல எல்லாம் BRU, NESCAFE தான்.

சில வீட்ல மட்டும் இன்னும் இந்த காப்பி இருக்கு. எங்க பெரியம்மா வீட்ல மட்டும் இன்னும் இத விடாம இருக்காங்க. அங்க போனா மட்டும் காப்பிய விடாம குடிச்சுட்டு வந்துடுவேன்.

Comments

சிறு வயதில் ( 10 முதல் 20 வரை) எங்கள் வீட்டில் பெரிய பாத்திரத்தில் பால் காஞ்சிட்டே இருக்கும். ( பாலில் நீரா ?? நீரில் பாலா ?? பட்டிமன்றம் வைக்கலாம்). அப்பப்ப காபித்தூள் ( என்ன பிராண்டு நினைவில்லை) கொஞ்சம் கருப்பட்டி தட்டிப் போட்டு ஒரு 300 எமெல் டம்ப்ளரில் ஊத்தி குடிப்போம். எத்தனை தடவை ஒரு நாளைக்கு ?? யாருக்குத் தெரியும் ??
சலம் said…
வாங்க சீனா, உங்க பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி..
என்ன பண்றது..எங்க வீட்ல அப்ப பசு இருந்தது.இப்ப அத யார் பாத்துக்கிறத்னு கேட்கறாங்க..
Anonymous said…
நானும் இந்த பில்டர் காபிக்கு ஒரு காலத்தில அடிமைதான். இப்போ எல்லாம் விட்டாச்சு. ஆனாலும் பில்டர் காபியோட ருசி மத்த காபிக்கு வர்ரதில்லைதான்.
kaappi nalla irunthathu, k.r narayanan indian coffee paththi potruntha article nyabagam varuthu, book my days nu ninaikiren.

Popular posts from this blog

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...