Skip to main content

என்னுடைய முதல் புத்தகக் கண்காட்சி

எல்லோரும் அவங்களுடைய புத்தகக் கண்காட்சியைப் பத்தி எழுதிட்டாங்க.நாமும் கொஞ்சம் எழுதுவோமே.12.45 PM க்கு என்னோட முதல் புத்தகக் கண்காட்சிக்கு நுழையறேன்.முதலில் விகடனுக்கு தான் போனேன்.தேசாந்திரி மற்றும் வெற்றிக்கு ஏழு படிகள் இரண்டையும் எடுத்தாச்சு.அடுத்தது கிழக்கு தான்.உள்ள நுழையும் போதே பாலபாரதியைப் பார்த்தேன்.கொஞ்ச நேரம் கழித்து நானே போய் அவர்ட்ட நானே அறிமுகம் பண்ணிகிட்டேன்(வேற என்னத்த பண்றது...)அங்க இருந்து மு.க வையும் குருதிப்புனலையும் அள்ளிக்கிட்டேன்.பாவம் சில்லரை இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டாங்க கிழக்கில.அடுத்த முறை பத்ரி அதை சரி செய்துடுவார்னு(??) நினைக்கிறேன்.

பிறகு காலச்சுவடு,உயிர்மை,மணிமேகலை,நர்மதா,வானதி,கண்ணதாசன்,
குமுதம்.. நிறைய கடைக்குப் போய் கொஞ்சம் தான் வாங்கினேன்.எங்கம்மா 500 ரூ மேல வாங்காதடான்னு சொல்லி விட்டு இருந்தங்க.பார்த்தா 1200 ரூ மேல பில் இருக்கு ஆனா புத்தகங்கள் ரொம்பக் குறைவா இருக்க மாதிரி தான் இருந்தது.மணியும் 2.30 ஆயிடுச்சி.அங்க என்னடானனா சுத்தி சுத்தி விடறாங்க.2.45 க்கு வெளியே வ்ந்தாச்சு.சரி வயிற்றுக்கும் கொஞ்சம் கொடுப்போம்னு உள்ள் நுழைஞ்சி ஒரு தயிர் சாதம் வாங்கினா அது சுட்ட சூட்டுல 30 நிமிடம் அது கூட சண்டைப் போட வேண்டியதாப் போச்சு.

கடைசியா கொஞ்சம் புத்தகம் கையில் இருந்தது.

தேசாந்திரி - எஸ்.இராமகிருஷ்ணன்
வெற்றிக்கு ஏழு படிகள் - சீனிவாசன்
மு.க - ஜெ.ராம்கி
குருதிப்புனல் - இ.பா
ஜெ.ஜெ சில குறிப்புகள் - சு.ரா
கோபல்ல கிராமம் - கி.ராஜநாராயணன்
வெற்றி நிச்சயம்,சொன்னார்கள் சொன்னார்கள் - சுகி.சிவம்
வாழ்க்கையே ஒரு வழிபாடு - இறையன்பு
பார்த்திபன் கனவு - கல்கி
இன்னும் சில சிந்தனைகள் - சுஜாதா

Comments

'இலைகளை வியக்கும் மரம்' பற்றியும் எழுதுங்களேன். பொதுவாக இணையத்தினூடேதான் தமிழ்ப்புத்தகங்களைப்பற்றித் தெரிந்துகொள்வேன்.

நீங்கள் வாசிக்கும் புத்தகங்களைப்பற்றி எழுதினால், வாங்கலாமா என்று முடிவு செய்ய வசதியாகவிருக்கும்.

நன்றி!

-மதி
சலம் said…
தங்கள் பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி மதி கந்தசாமி..
கண்டிப்பாக நான் இலைகளை வியக்கும் மரம் பற்றி ஒரு கட்டுரை எழுதுவேன்.
உங்களுக்கு அப்போது தெரியப்படுத்துகிறேன்.

Popular posts from this blog

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...